2022-ம் ஆண்டு வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள்: பாபா வங்கா கணிப்பு!

2022-ம் ஆண்டு வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள்: பாபா வங்கா கணிப்பு!

புத்தாண்டு 2022-க்கான கணிப்பாக பல்கேரிய நாட்டு திர்ர்க்கதரிசியான் பாபா வங்கா என்ற மூதாட்டி பல் வருடங்களூக்கு முன்பே சொல்லிவிட்டுச் சென்ற விஷயம் இப்போது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகியில் 2022-ல் உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்றும் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என்றும் கணித்துள்ளார் பாபா வங்கா.

யார் இந்த பாபா வங்கா?

பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டியான பாபா வங்கா, எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணித்த தீர்க்கதரிசியாக கருதப் படுகிறார். இவர் தன் 12-வது வயதில் ஒருமுறை சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். அதன்பிறகு அவருக்கு சில அபூர்வ சக்திகள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது கணிப்புகளில் 85 சதவிகிதம் பலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1996-ம் ஆண்டில் தன் 84-வது வயதில் பாபா வங்கா உயிரிழந்தார் என்றாலும், இவர் ஒவ்வொரு ஆண்டும் இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முக்கிய, பயங்கர நிகழ்வுகள் குறித்து முன்கூட்டியே கணித்து வைத்து சென்றுள்ளார். அவற்றில் பல உண்மையாகியுள்ளன

அவர் முன்கூட்டியே கணித்திருந்த சோவியத் யூனியன் சீர்குலைவு, இளவரசி டயானா மரணம், 2004=ல் தாய்லாந்தை சுனாமி தாக்கியது, அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றது உள்ளிட்ட நிகழ்வுகள் உண்மையாகி உள்ளன. மேலும், 9/11 தீவிரவாத தாக்குதல் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்தும் பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளார் பாபா வங்கா.

அந்த வகையில் உலகுக்கு 2022-ம் ஆண்டு மிகுந்த சோதனையான காலகட்டம் என்று அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு 20222 குறித்த அவரது கணிப்பு:

வருகிற 2022-ல் உலகெங்கும் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கி அழிக்கும். இதன் காரணமாக உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். உலகின் மிகப் பெரிய நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் இந்த ஆண்டு ஒரு உண்மையான போர் வெடிக்கும். ஆசிய தலைவர் ஒருவர் தன் பதவியிலிருந்து வெளியேற்றப் ப்படுவார். அவரது நாடு ஆயுத மோதலின் களமாக மாறும். இதற்கு ஐரோப்பா அணு ஆயுதத் தாக்குதலின் மூலம் பதிலளிக்கும்.

வானிலை மற்றும் காலநிலையை பொறுத்தவரை இந்த ஆண்டில் அமெரிக்கா மோசமான வறட்சியை எதிர்கொள்ளும். பூமியின் மறுபக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழை கொட்டி தீர்க்கும். சீனாவின் தலைநகரம் தண்ணீரால் பரவும் நோயால் பாதிக்கப்படுவர், இதில் ஏராளமான மக்கள் இறக்க நேரிடும். அதே போன்று ஜப்பானில் மழை கொட்டி தீர்க்கும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏழ்மையான பகுதிகளை பஞ்சம் அழிக்கும்.

 மேலும், வேற்று கிரகவாசிகள் 2022-ல் பூமிக்கு வருவார்கள். உலக மக்கள் அதிக நேரத்தை திரைகளின் முன் செலவிடுவார்கள்.

இவ்வாறு 2022-ம் ஆண்டுக்கான கணிப்பாக தீர்க்கதரிசி பாபா வங்கா கூறியுள்ளது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி வைரலாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com