24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர்: சீனாவில் கண்கவர் வாண வேடிக்கையுடன் நிறைவு!

24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர்: சீனாவில்  கண்கவர் வாண வேடிக்கையுடன் நிறைவு!

சீனாவில் நடைபெற்ற 24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர், கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று முடிவடைந்தது.

சீனாவில் இம்மாதம் 4-ம் தேதி முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.  இந்தியா உள்பட 91 நாடுகள் கலந்துக்கொண்ட இப்போட்டி, சீனாவின் 3 நகரங்களில் நடைபெற்ற்ரது. இப்போட்டிகளில் 37 பதக்கங்கள் வென்று நார்வே நாடு பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் கண்கவர் நிறைவு விழா பெய்ஜிங்கில் உள்ள பறவைக்கூடு ஸ்டேடியத்தில் விமர்சியாக நடைபெற்றது. இதையொட்டி போட்டியில் பங்கேற்ற நாடுகளின் வீரர்கள் அரங்கில் அணி வகுத்தனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தியதற்கு சர்வேதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தாமஸ் பாச் வாழ்த்து தெரிவித்தார். கொரோவை முறியடிக்க ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து போட்டி முடிவுக்கு வருவதாக பாச் அறிவித்தார்.

இதையடுத்து ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, அடுத்து போட்டியை நடத்தும் இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டது. மிலான் மற்றும் கார்டினா ஜி ஆம்பசோ நகர மேயர்கள் இந்த கொடியை பெற்றுக்கொண்டனர். அப்போது இத்தாலி தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 8 நிமிட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினர். இறுதியாக அரங்கேறிய வாணவேடிக்கைகள் பலரையும் சிலிர்க்க வைத்தன. நிறைவு விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங், தமது மனைவியுடன் கலந்துகொண்டார்.

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 37 பதக்கங்களுடன் நார்வே முதலிடத்தையும், ஜெர்மனி 27 பதக்கங்களுடன் 2-ம் இடத்தையும், சீனா 15 பதக்கங்களுடன் 3-ம் இடத்தையும் பிடித்தன. சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக இத்தொடரை அமெரிக்கா, ஆசுதிரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியில் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com