கர்நாடகாவில் இந்து இளைஞர் படுகொலை; அதிகரிக்கும் பதற்றத்தால் 144 அமல்!

கர்நாடகாவில் இந்து இளைஞர் படுகொலை; அதிகரிக்கும் பதற்றத்தால் 144 அமல்!

கர்நாடகாவில் சிவமோகா மாவட்டத்தில் இந்து இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்து.

ஷிவ்மோகா மற்றும் பத்ராவதி நகர்களில் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிவமோகா மாவட்டத்திலுள்ள சீகேஹாட்டி என்ற பகுதியில் ஹர்ஷா (26) என்ற இளைஞர் நேற்றிரவு 10 மணியளவில் சில அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதனையடுத்து மெக் கேன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் ஆர்எஸ்எஸ் அங்கமான விஷ்வ ஹிந்து பரிஷத் சார்புடையவர் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஷிவமோகாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இச்சம்பவம் குறித்து தெரிவித்ததாவது;

ஹர்ஷா ஆர்எஸ்எஸ் இயக்கத்தில்  தன்னார்வலராக இருந்தாக தெரிய வருகிறது. இந்தs சம்பவத்துக்கும் கர்நாடக ஹிஜாப் விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஹர்ஷா மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக போலீஸ் சந்தேகிக்கிறது. இச்சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இச்சம்பவத்தையடுத்து

ஷிவமோகா துணை ஆணையர் ஆர்.செல்வமணி, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com