21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு: இன்றுமுதல் ரேசன் கடைகளில் விநியோகம்!

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு: இன்றுமுதல் ரேசன் கடைகளில் விநியோகம்!

தமிழகத்தில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழர் திருநாளான தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி,பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதையடுத்து அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

அதன்படி,குடும்ப அட்டை ஒன்றுக்கு வழங்கப்படும் பொருட்கள்:பச்சரிசி ஒரு கிலோ,வெல்லம் ஒரு கிலோ,முந்திரி – 50 கிராம்,திராட்சை – 50 கிராம், ஏலக்காய் – 10 கிராம்,பாசிப்பருப்பு – 500 கிராம்,நெய் – 100 கிராம், மஞ்சள்தூள் – 100 கிராம்,மிளகாய் தூள் – 100 கிராம்,மல்லித்தூள் – 100 கிராம் ,கடுகு – 100 கிராம்,சீரகம் – 100 கிராம்,மிளகு – 50 கிராம்,புளி – 200 கிராம், கடலைபருப்பு – 250 கிராம்,உளுத்தம் பருப்பு – 500 கிராம் ,ரவை – 1 கிலோ, கோதுமை மாவு – 1 கிலோ,உப்பு – 500 கிராம்,துணிப்பை – 1 மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com