40 மாடி விதிமீறல் இரட்டை கோபுர கட்டடம்; நொய்டாவில் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

40 மாடி விதிமீறல் இரட்டை கோபுர கட்டடம்;  நொய்டாவில் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நொய்டாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 40 மாடி குடியிருப்பு ஒன்றை உச்சநீதிமன்ற உத்தரவைன்படி இன்று 100- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று இடிக்கத் தொடங்கினர்.

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் நிறுவனம் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடத்தைக் கட்டியுள்ளது. முதலில் 16 மாடிகளுடன்  550 குடியிருப்புகள் கொண்ட கட்டிடமாக மட்டுமே கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் பெறப்பட்டது. ஆனால் விதிகளை மீறி படிப்படியாக 900-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட 40 மாடி கட்டிடமாக கட்டியது சூப்பர்டெக் நிறுவனம். .இதையடுத்து இக்கட்டட குடியிருப்புவாசிகள் 2014-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை எதிர்த்து  ரியல் எஸ்டேட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எம் ஆர் ஷா அமர்வு, இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று முந்தினம் வெளியிட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டதாவது;

நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட அந்த  40 மாடி கொண்ட இரட்டை கோபுரத்தை 3 மாதத்துக்குள் இடிக்க வேண்டும். அப்படி அந்த கட்டடத்தை இடிக்கக்கூடிய செலவை சூப்பர்டெக் நிறுவனமே ஏற்க வேண்டும். மேலும், இந்த குடியிருப்பில் வசிக்கக்கூடிய உரிமையாளர்களுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பித் தரவேண்டும்.

-இவ்வாறு உத்தரவு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.  இந்நிலையில், நொய்டாவில் உள்ள அந்த 40 மாடி கட்டடத்தை 100 –க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று இடிக்கத் தொடங்கினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com