ட்விட்டருக்கு போட்டி: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய செயலி அறிமுகம்!

ட்விட்டருக்கு போட்டி: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய செயலி அறிமுகம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேஸ்புக் மற்றும் டிவிட்டருக்கு மாற்றாக உருவாக்கிய புதிய 'ட்ரூத் சோஷியல்' என்னும் புதிய செயலி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை டிரம்பின் கணக்கிற்கு தடை விதித்தது.எனவே  இவற்றுக்கு போட்டியாக செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவரது டிரம்ப் மீடியா & டெக்னாலஜி க்ரூப் உருவாக்கியுள்ளது. டிரம்பின் இந்த புதிய  'ட்ரூத் சோஷியல்' எனப்படும் செயலி நேற்று முன் தினம் (பிப்ரவரி 20) ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகப் படுத்தப் பட்டது.

இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது;

எங்கள் நிறுவனம் உருவாக்கியுள்ள 'ட்ரூத் சோஷியல்'  செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும். இதன்மூலம் நாங்கள் பல மக்களுக்கு சிறந்த தளம் அமைத்து கொடுக்க போகிறோம். மார்ச் மாதத்திற்குள் அனைத்து நபர்களுக்கும் இந்த செயலியின் பயன்பாடு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்வோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com