0,00 INR

No products in the cart.

சகுந்தலை சமந்தா!

-ராகவ் குமார்.

இந்த ஆண்டு நடிகைகளில் அதிகம் பரபரப்பாக பேசப்படுபவர் சமந்தா.   விவாகரத்து பிரச்சனை, ஓ சொல்றியா மாமா.. சூப்பர் ஹிட் பாட்டு என செம ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறார் சமந்தா.

இப்போது சமந்தா லேட்டஸ்டாக நடிக்கும் படங்களின் தலைப்பிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். யசோதா, சாகுந்தலம் என புராண இதிகாச பெயர்களில்  தலைப்புள்ள படங்களில் நடிக்கிறார்.

சாகுந்தலம்  படத்தின் போஸ்டர்களில் சமந்தா வித்தியாசமாக, கொள்ளை அழகாக தெரிகிறார். சுற்றிலும் மான்கள் இருக்க ஒரு நந்தவனத்தில் புராணகால் ரிஷி பத்தினி சாயலில் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார்.

இது புராண சகுந்தலையா, அல்லது மாடர்ன் சகுந்தலையா என்பது படம் வந்த பின்புதான் தெரியும்.

சாகுந்தலம் படத்தை குண சேகர் இயக்குகிறார். அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்கா  இதில் புதுமகமாக அறிமுகம் ஆகிறார். மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பன் மொழிகளில் இப்படம் தயாராகிறது.இது இந்திய படமாக இருக்குமாம்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. பெண்களை மைய படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் குறைந்து வரும் சினிமாவில் கதாநாயகியை மையமாக வைத்து படம் வருவது ஆரோக்கியமான விஷயம்தான்.

 

 

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...

தொண்டர் வீட்டில் குளிக்கும் அமைச்சர்: வைரல் போட்டோ!

0
உத்தரப்பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா நந்தி, தன் கட்சித் தொண்டர் வீட்டில் குளிக்கும் காட்சி சமூக வலைதளங்களீல் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநில அமைச்சர் நந்தகோபால் வெளியூர்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லும்போது, அங்குள்ள...

சாணிக் காயிதம்: வன்முறை டூ மச்!

0
-லதானந்த். பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழிவாங்கல்தான் கதை. அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. நல்லவேளை இது தியேட்டரில் வெளியாகவில்லை; வெளியாகியிருக்கவும் முடியாது – அவ்வளவு வன்முறை. நமக்குத் தீங்கிழைத்தவர்களுக்குச் சட்டம் கொடுக்கும் தண்டனை போதாது;...

8 ஆயிரம் மீட்டருக்கு மேல் 5 சிகரங்கள்; எட்டிப் பிடித்த முதல் இந்தியப்பெண்!

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா பகுதியைச் சேர்ந்த  பிரியங்கா மோஹிதே என்ற இளம்பெண் இமயமலையில் 8 ஆயிரம் மீட்டருக்கு உயரமான 5 சிகரங்களை எட்டிப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.  இதுகுறித்து...

ஐங்கரன்.. தேவை அங்கீகாரம்!

0
-ராகவ் குமார். நமது நாட்டின் இளைய தலைமுறையினர் அவர்களது  திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நெற்றி பொட்டில் அடித்தது போல சொல்கிற்து ‘ஐங்கரன்’ படம்! டைரக்டர் ரவி அரசுவின் இயக்கம்...