குடியரசுதின அலங்கார ஊர்திகள்: மெரினாவில் மேலும் ஒரு வாரம் வைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

குடியரசுதின அலங்கார ஊர்திகள்: மெரினாவில் மேலும் ஒரு வாரம் வைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

சென்னை கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குடியரசு தின அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினத்தில் விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் 3 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பின்னர் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சென்று இந்த ஊர்திகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 20-ஆம் தேதி முதல் காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்துக்கு இந்த அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிக்கு வைக்கப்படும்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com