சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா!

சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா!

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை தோற்கடித்து கிராண்ட மாஸ்டர் பட்டம் வென்றார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா..

ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் போட்டித்தொடர் காணொலி காட்சி மூலம் நடைபெற்றதில், சென்னையைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான கார்ல்சனுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா மொத்தம் 39 நகர்வுகளில் கார்ல்சனை தோற்கடித்தார். இதையடுத்து பிரக்ஞானந்தாவுக்கு உலகின் நம்பர் ஒன் செஸ் சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது. இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துள்ளது.

இதுறித்துகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் தெரிவித்ததாவதூ:

இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளீர்கள் பிரக்ஞானந்தா. தற்போது நடைபெற்று வரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்றுள்ள 16 வீரர்களில் அனுபவமிக்கவர் கார்ல்சன். அவரை நீங்கள் வீழ்த்தியது சாதனை. சதுரங்க விளையாட்டில் உங்களது வெற்றி தொடரட்டும்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்ததாவது:

"சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த, தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்"

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com