25 அடியிலிருந்து மேலே வந்த உறைகிணறு: திருப்பதியில் நடந்த அதிசயம்!

25 அடியிலிருந்து மேலே வந்த உறைகிணறு: திருப்பதியில் நடந்த அதிசயம்!

Published on

ஆந்திராவில் திருப்பதி, ஸ்ரீ கிருஷ்ணா நகர் பகுதியில் இன்று சுமார் 25 அடி ஆழமுள்ள உறைகிணறு ஒன்று தானாகவே திடீரென்று மேலெழும்பி வந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்து உள்ளாக்கியிருக்கிறது.

இதுகுறித்து திருப்பதி எம்எல்ஏ-வான கருணாகர ரெட்டி அங்கு சென்று பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சிற்றோடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதன்மீது தற்போது வீடுகள் கட்ட பட்டுள்ள நிலையில் தற்போதும் அந்த சிற்றோடை உயிரோட்டத்துடன் உள்ளது.சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பூமிக்கடியில் நீரோட்டம் மிகுந்து, அங்கு புதையுண்டு கிடந்த உறைகிணறு உந்து சக்தியால் மேலெழுந்து வந்துள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com