27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு!

27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு!
Published on

தமிழகத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து தற்போது 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது


இந்நிலையில், சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாஸ் தெரிவித்ததாவது:

ரயில் நிலையங்களில் பயணிகளை வழியனுப்ப வருவோர் அதிக அளவில் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்லது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களான பொன்மலை, பூதலூர், பாபநாசம், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம் ஜங்ஷன், திருப்பாதிரிப்புலியூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், திருவாரூர், மன்னார்குடி, திருவெறும்பூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி நகரம், திருச்சிராப்பள்ளி கோட்டை, அரியலூர், லால்குடி, பெண்ணாடம், காரைக்கால், பண்ருட்டி, நீடாமங்களம் ஜங்ஷன், ஸ்ரீரங்கம் ஆகிய 27 ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை கட்டணம் ஒரு நபருக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும். மேலும், கொரோனா குறைந்ததும் நடைமேடை டிக்கெட் கட்டணம் 50 ரூபாயிலிருந்து மீண்டும் 10 ரூபாயாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com