28 மணி நேரத்தில் 5 மில்லியன் வியூவர்ஸ்: தெறிக்க விடும் மாநாடு ட்ரெயிலர்!

28 மணி நேரத்தில் 5 மில்லியன் வியூவர்ஸ்: தெறிக்க விடும் மாநாடு ட்ரெயிலர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்ட 28 மணிநேரத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்தே படமும் வெளியாக உள்ள நிலையில், அதனுடன் மாநாடு படமும் மோதவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டைம் லூப் கான்செப்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்திருந்தது. ஹாலிவுட்டில் வெளியான டெனெட் படத்தின் சாயல் இந்தப் படத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இப் படத்தின் ட்ரெயிலர் வெளியான 28 நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு. அவர் பதிவிட்டதாவது.

இந்த ட்ரெயிலரை இதுவரை பார்க்காவிட்டால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் பார்த்தவர்கள் மீண்டும் பார்க்க பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com