மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்; முதல் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்; முதல் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

Published on

மணிப்பூர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதலாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதுகுறித்து அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது;

மணிப்பூரில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இங்கு சுமார் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 22 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டிக் கொண்டு வருகின்றனர்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com