0,00 INR

No products in the cart.

பைக் ரேஸ்.. ஸ்மார்ட் ஆபீசர் அஜீத்! வலிமை அட்டகாசம்!

-ராகவ் குமார்.

வலிமை விமர்சனம் :சாத்தானுக்கும் கடவுளுக்கும் நடக்கும் போர், நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போர் என ஆண்டாண்டுகாலமாக சொல்லப்படும் ஒன் லைன் தான் வலிமை.

வலிமை என்பது தனக்கு தேவையானதை எடுத்து கொள்வது என்று எண்ணும் கெட்டவனுக்கும், வலிமை என்பது அழிப்பதற்கு அல்ல காப்பதற்குத்தான் என எண்ணும் நல்லவனுக்கும் இடையே நடக்கும் யுத்தம் இப்படத்தின் கதை.

கொலம்பியா நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்குள் போதை மருந்துகள் வருவதை காவல் துறை கண்டு பிடிக்கிறது.இதன் மூலத்தை கண்டறிந்து அழிக்க மதுரையில் காவல் துறை அதிகாரியாக உள்ள அஜித்தை சென்னைக்கு வர வைக்கிறது காவல் துறை. இந்த போதை மருந்து பரிமாற்றத்திற்கு பின் பைக் ரேஸிங்கில் ஈடுபடும் வேலை இல்லா இளைஞர்கள்,செயின் பறிப்பு என பெரிய நெட் ஒர்க் இருப்பதை கண்டு பிடிக்கிறார் அஜீத். இதை எப்படி கண்டுபிடிக்கிறார், எதிர்த்து நிற்கிறார் என்பதை பிரம்மாண்டமான பின்புலத்தில் அஜித்தின் தோள்களில் ஏறி சொல்லி இருக்கிறார் H.வினோத்.

படத்தில் அஜீத் படு ஸ்மார்ட் போலீஸ் அதிகாரியாக வந்து கலக்குகிறார்.விதவிதமாக துப்பறிவதும், பைக் ரேஸ் காட்சிகளில் அட்டகாசப்படுத்துவதும், செண்டிமெண்ட் காட்சிகளில் உருகுவது என பிரமாதபடுத்தி இருக்கிறார்.வில்லன் கார்த்திகேயா டெரர். தனது சமூக கோபத்தை நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.

ஹியூமா குரோஷி காதலியாக இல்லாமல் தோழியாக வந்து பிரச்சனைகளின்போது ஆறுதல் படுத்துகிறார்.காதல் இல்லாமல், ரொமான்ஸ் செய்யாமல் நட்பாக ஒரு ஆணும் பெண்ணும் பழக முடியும் என்று தமிழ் சினிமாவில் இப்படி ஒரு களத்தை உருவாக்கியதற்கு டைரக்டரை பாராட்டலாம்.

படத்தின் முதல் பாதி பல்வேறு ட்விஸ்ட், பரபரப்பான திரைக்கதை என வேகமாக நகர்ந்தாலும் இரண்டாவது பாதி ஒரே மையத்தில் சுற்றி, சுற்றி வருகிறது. படத்தில் நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ள மற்றொரு காதா பாத்திரம் – சண்டை காட்சிகளில் வரும்  ரேஸ்  பைக்குகள்தான்.

இந்த பைக்குகள் திரையில் மேலே பறக்கும்போது நாமும் சேர்ந்து பறக்கிறோம். இந்த உணர்வை நம் கண்களுக்கு தந்து நம்மை வியக்க வைத்திருப்பது நீரவ்  ஷாவின் ஒளிப்பதிவு. யுவன் ஷங்கர்ராஜாவின் இசை படத்தோடு ஒன்றச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

படத்தில் வேறொரு ஹீரோ ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் தான். அனைத்து சண்டை காட்சிகளும் நிஜமாகவே ஹாலிவுட் லெவல் தரத்திற்கு உழைத்து இருக்கிறார்.இந்திய சினிமாவில் சண்டை கட்சிகளுக்காக பேசப்படும் படங்களில் வலிமையும் ஒன்றாக இருக்கும்.படத்தின் திரைக்கதை மற்றும் லாஜிக் மீறல்கள் என சில நெகடிவ் விஷயங்கள் இருந்தாலும், அஜித்தின் மாஸ் ரசிக்கப்படும் ஒன்றுதான்.

வலிமை -இன்னமும் வலுவாக இருந்திருக்கலாம்.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...

தொண்டர் வீட்டில் குளிக்கும் அமைச்சர்: வைரல் போட்டோ!

0
உத்தரப்பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா நந்தி, தன் கட்சித் தொண்டர் வீட்டில் குளிக்கும் காட்சி சமூக வலைதளங்களீல் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநில அமைச்சர் நந்தகோபால் வெளியூர்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லும்போது, அங்குள்ள...

சாணிக் காயிதம்: வன்முறை டூ மச்!

0
-லதானந்த். பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழிவாங்கல்தான் கதை. அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. நல்லவேளை இது தியேட்டரில் வெளியாகவில்லை; வெளியாகியிருக்கவும் முடியாது – அவ்வளவு வன்முறை. நமக்குத் தீங்கிழைத்தவர்களுக்குச் சட்டம் கொடுக்கும் தண்டனை போதாது;...

8 ஆயிரம் மீட்டருக்கு மேல் 5 சிகரங்கள்; எட்டிப் பிடித்த முதல் இந்தியப்பெண்!

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா பகுதியைச் சேர்ந்த  பிரியங்கா மோஹிதே என்ற இளம்பெண் இமயமலையில் 8 ஆயிரம் மீட்டருக்கு உயரமான 5 சிகரங்களை எட்டிப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.  இதுகுறித்து...

ஐங்கரன்.. தேவை அங்கீகாரம்!

0
-ராகவ் குமார். நமது நாட்டின் இளைய தலைமுறையினர் அவர்களது  திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நெற்றி பொட்டில் அடித்தது போல சொல்கிற்து ‘ஐங்கரன்’ படம்! டைரக்டர் ரவி அரசுவின் இயக்கம்...