3 புதிய வேளாண் சட்டங்கள் ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு!

3 புதிய வேளாண் சட்டங்கள் ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று குருநானக் ஜெயந்தியையொட்டி கர்தார்பூர் சாலையை காணொலிக் காட்சி மூலம் மீண்டும் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

குருநானக் ஜெயந்தியையொட்டி, உலக மக்களுக்கு எனது நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். மேலும்

மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் முடிவு செய்துள்ளது. டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளிடம் மன்னிப்பு கோருகிறேன். அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்லும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். 2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். அந்த வகையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நமது நாட்டில் உள்ள விவசாயிகளில் நூற்றில் 80 பேர் சிறு விவசாயிகள். ஃபைசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டுத் திட்டத்தை பலப்படுத்தினோம், மேலும் அதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக நுண் பாசனத் திட்டத்துக்கான நிதி இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய 3 வேளாண் சட்டங்களின் நோக்கங்களை சிலர் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கிறார்கள். சிறு விவசாயிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கானவையே இந்த வேளாண் சட்டங்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. எனவே மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள், கடந்த ஒரு ஆண்டாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com