32 ஆண்டுகள் தனியாக ஒரு தீவைக் காத்தவர்

32 ஆண்டுகள் தனியாக ஒரு தீவைக் காத்தவர்
Published on

செல்வா

32 ஆண்டுகளாகத் தனி ஆளாய் ஒரு தீவைப் பாதுகாத்து வரும் மனிதர். அவருக்குத் திடீரென வந்தது சோதனை. என்ன தெரியுமா?

நாம் நகர்ப்புறங்களில் பல சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். விரல் சொடுக்கினால் இன்டெர்நெட், ஒரு பட்டனை அழுத்தினால் வீடு தேடி வரும் என அனைத்து வசதிகளையும் அனுபவித்தாலும் சிலருக்கு "என்னடா.. இது வாழ்க்கை" என்று சலிப்புத் தட்டுகிறது. ஆனால் 32 ஆண்டுகளாக ஒரு மனிதர் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஒரு தீவைப் பாதுகாத்து வந்துள்ளார். ஆனால் தற்போது அவருக்கே தீவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் யார்? அந்த தீவு எது?

இத்தாலியின் ராபின்சன் க்ரூஸோ என்று அழைக்கப்படும் மவுரோ மொராண்டி (81) நபர்தான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். 1989-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் இத்தாலி கடற்பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்தார் மவுரோ மொராண்டி. அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு – மணல் கொண்ட கடற்கரைக்குப் பெயர் பெற்ற புடெல்லி என்ற தீவில் தஞ்சமடைந்தனர். 1989-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் தெற்கு பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தார் மவுரோ மொராண்டி. அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு – மணல் கொண்ட கடற்கரைக்குப் பெயர் பெற்ற புடெல்லி என்ற தீவில் தஞ்சமடைந்தனர். அவருடன் வந்த மற்ற நண்பர்கள் தொடர்ந்து பயணம் செய்ய பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, மவுரோ மொராண்டியின் மனமோ வேறு மாதிரி யோசித்தது. அந்தத் தீவின் பாதுகாவலர் ஓய்வு பெறுவதாக அறிந்த அவர், தான் வைத்திருந்த படகை விற்று தீவினைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போரில் சில காலம் வீரர்கள் தங்கியிருந்த இடத் தில் தன்னுடைய தீவில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். மூன்று தசாப்தங்களாக அதாவது முப்பது ஆண்டுகளாகத் தீவை மொராண்டி பராமரித்துக்கொண்டு வந்திருக்கிறார். பொதுவாக அவர் யாரிடமும் பேசுவதில்லையாம். சுற்றுலாவுக்காகப் போகிறவர்களிடம் மட்டும் மிகக் குறைவான வார்த்தைகளைப் பேசுகிறார்.

அன்றிலிருந்து இன்று வரை புடெல்லி தீவை கண் இமை போல் பாதுகாத்து வருகிறார் மொரண்டி. இவர் பல ஆண்டு களாகத் தீவை எந்தவிதப் பிரச்னையும் இன்றி பாதுகாத்து, கடற்கரைகளை அழகாக வைத்திருந்தார். தீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விளக்கினார். அதாவது அங்குள்ள கடற்பாறைகள், செடிகள், கொடிகள், விலங்குகள் ஆகியவற்றை மவுரோ மொராண்டியைவிட அறிந்தவர்கள் வேறு யாருமில்லை.

இந்த நிலையில் அண்மையில் லா மடாலேனா தேசிய பூங்காவை நிர்வகித்து வரும் அதிகாரிகள் மவுரோ மொராண்டியை, தீவில் இருந்து வெளியேறும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.

சொர்க்கத்தின் அழிவு தொடங்குகிறது; மொராண்டி இல்லாமல் என்னால் புடேலி தீவைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அவரை புடெல்லி தீவிலேயே தங்க அனுமதிக்குமாறு இத்தாலிய அரசிடம் கேட்டு 70,000க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்ட மனுக்கள் அனுப்பப் பட்டன. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தொடர் அழுத்தத்தால் 32 ஆண்டுகளுக்குப் பிறகு புடெல்லி தீவைவிட்டு வருத்தத்துடன் வெளியேற முடிவு செய்துள்ளார் 82 வயதாகும் மவுரோ மொராண்டி. மொராண்டியின் கவலையெல்லாம் அரசாங்க அதிகாரிகள் எதிர்காலத்தில் இந்தத் தீவை இதேபோல் பராமரிப்பார்களா என்பதுதான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com