0,00 INR

No products in the cart.

400 ஆண்டுகால வியாபாரம்

வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும்
சோம.வள்ளியப்பன்
பங்குச்சந்தை ஒரு வகை சூதாட்டம் தானே! பத்திரிகைகள் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரைகள் எழுதுவதாகவும் அறிகிறேன். பங்கு சந்தை கள் ஏன், எப்படி, எங்கு. என்று தோன்றின?

 

– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

பதில் : பார்க்கப்போனால் இந்த ஒரு கேள்விக்குள் மூன்றுக்கும் மேற் பட்ட கேள்விகள் இருக்கின்றன! மூன்றாவது கேள்வியிலிருந்து தொடங்கி இரண்டு வழியாக முதல் கேள்விக்கு கடைசியாகப் பதில் சொல்கிறேன்.

உலகின் முதல் பங்குச்சந்தை நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் 1602ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ‘ஸ்டாக் எக்ஸ் சேஞ்’சை ‘நியுபெர்ஃ’ என்று அவர்கள் மொழியில் அழைத்திருக்கிறார்கள். அப்போது அங்கே பல நிறுவனங்களின் பங்குகள் அல்ல, ஒரே ஒரு நிறு வனத்தின் பங்குதான் வர்த்தகமாகியிருக்கிறது. அந்த நிறுவனமும் நம் மோடு தொடர்புடைய ஒரு நிறுவனம்தான். அதன் பெயர், `டச் ஈஸ்ட் இந்தியா கம்பெனி`. அதை VOC என்று அழைத்திருக்கிறார்கள்.

1607ஆம் ஆண்டில் அந்தப் பங்குச்சந்தையில் ‘டிரைவ்வேட்டிவ்’ வர்த்த கம்கூட நடந்திருக்கிறது. அதன் பின்னர்தான் மற்ற நாடுகளில் பங்குச் சந்தைகள் வந்திருக்கின்றன. ஆக, உலகில் சுமார் 400 ஆண்டுகளாக இந்த வர்த்தகம் நடக்கிறது. இப்போது நாம் பப்ளிக் லிமிடெட் கம்பெனி என்று குறிப்பிடும் பங்குகள் வெளியிடும் நிறுவனங்களுக்கு அப்போது ’ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி’ என்று பெயர்.

தெற்காசியாவின் முதல் பங்குச்சந்தையாக மும்பை பங்குச்சந்தை, 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், மும்பை பங்குச்சந்தை வருவ தற்கு முன்பாகவே, பம்பாயில் மரத்தடியில் 1850 ஆண்டுகளிலேயே பங்கு வர்த்தகம் நடந்திருக்கிறது.

அடுத்து பங்குச்சந்தை ஒருவகை சூதாட்டம்தானே என்ற கேள்விக்கான பதில்.

பங்குச்சந்தை ஓர் சூதாட்டம் செய்யுமிடமா?

ஆம்.

பங்குச்சந்தையில் மிக அதிகமான வர்த்தக வாய்ப்புகள் தரும் இடமா?

ஆம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்து கணிசமான லாபம் பார்க்கமுடியுமா?

ஆம்.

என்ன இது மூன்றுக்கும் ஒரே பதில்தானா?

இந்த நான்காவது கேள்விக்கும் அதே பதில்தான். ஆம்.

காரணம் பங்குச்சந்தையில் எல்லாவிதமான வியாபாரங்களுக்கும் வாய்ப் பிருக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் மூன்றையும் பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் வெற்றிகரமாக. சிலர் தொடர்ந்து வெற்றியைத் தேடிக்கொண்டே…

கண் தெரியாத ஐந்து நபர்கள் ஓர் யானையைப் பார்த்த கதை தெரிந் திருக்கலாம். யானையைச் சுற்றி நின்ற அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் தொட்டுத் தடவிப் பார்த்திருக்கிறார்கள். கால் பக்கம் நின்று, தடவிப் பார்த்துவிட்டு, யானை தூண் போலிருக்கிறது என்றும், காதைத் தடவிப் பார்த்தவர் யானை, முறம் போலிருக்கிறது என்றும், மற்றவர்கள் அவர்கள் தடவிய பகுதிகளை வைத்து வேறு மூன்று விதங்களாகச் சொன்னதுதான் அந்தக் கதை.

பங்கு வியாபாரத்தில் ஈடுபடும் பலரும் அப்படி வெவ்வேறு விதங்களில் இறங்கி, அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் அதுவேதான் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

மிகப் பெரும் லாபம் அல்லது மிகப் பெரும் நட்டம் என்பதெல்லாம் சூதாட் டங்களில் நடக்கும். பங்குச்சந்தையிலும் நடக்கிறது. மறுக்கவே முடியாது. ஆனால் சந்தை முழுக்கவே அப்படித்தான் என்றோ, அது தவிர வேறு வழிகளோ வாய்ப்புகளோ அணுகுமுறைகளோ இல்லை என்றோ சொல்ல முடியாது.

டெக்னிகல் அனாலிசிஸ் போன்ற முறைகளைப் பயன்படுத்தி, வாங்கி விற்று, விற்று வாங்கி (இரண்டும் உண்டு) நல்ல லாபம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். நட்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.

பண்டமெண்டல் அனாலிசிஸ் போன்ற முறைகளைப் பயன்படுத்தி அல்லது விவரம் அறிந்தவர்கள் பரிந்துரைகளின்படி நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கி வைத்துக்கொண்டு, அவற்றிலிருந்து டிவிடெண்ட் வருமானம் மற்றும் அவற்றின் தொடர் விலை ஏற்றத்தால் கணிசமான லாபம் பார்ப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, 1980ம் ஆண்டு பத்தாயிரம் ரூபாய்க்கு விப்ரோ நிறுவனப் பங்குகளை வாங்கி இப்போது வரை வைத்திருந்தால் அந்தப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூபாய் 806 கோடி ஆகியிருக்கும். இதே போன்ற கணக்கு களை இன்னும் பல நல்ல புளுசிப் பங்குகளை வாங்கி வைத்திருப் பவர்களுக்கும் சொல்லலாம்.

எனவே பங்குச்சந்தையே ஒரு சூதாட்டம்தான் என்று சொல்லமாட்டேன். அதைச் சூதாட்டம்போலப் பயன்படுத்த பலர் இருக்கிறார்கள். அவர்களால் சாதாரண மக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். அந்தச் சாதாரண மக்கள் குறுகிய கால மற்றும் மிகப் பெரும் லாபங்களுக்கு ஆசைப்படாமல், நிதானமான முறைகளைக் கையாண்டால், நீண்ட காலத்தில் மற்ற பல முதலீடுகளில் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் காட்டிலும் கூடுதலான வருமானம் பார்க்கலாம்.

சொல்வது தத்துவம் அல்ல. அனுபவம். சுய மற்றும் கண்ட அனுபவங்கள்.

இப்போது மூன்றாவது கேள்விக்கான பதில்.

பத்திரிகைகள், இதழ்களில் பங்குகள், நிறுவனங்கள் குறித்து எழுதப் படுபவை எல்லாம் காசு வாங்கிக்கொண்டு எழுதப்பட்டவையா என்ற கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ ஒற்றை வார்த்தையிலும் தீர்மானமாகவும் பதில் சொல்ல முடியாது.

அப்படித்தான் எழுதப்பட்டனவோ என்று வலுவாகச் சந்தேகப்பட வைக்கின்றன. பல பங்குகளின் பின்னாளைய இறங்கிவிட்ட விலைகள், குறிப்பாக, ஐ.பி.ஓ. உரிமைப் பங்குகள் வெளியீடுகளுக்கு முன் அந்நிறுவனங்கள் குறித்து வெளிவரும் செய்திகள் மற்றும் கட்டுரைகள்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

0
பாரதி நினைவு நாள் நூற்றாண்டு சாந்தி ஜெகத்ரட்சகன் செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன....

ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்-15 எஸ்.சந்திரமௌலி "டைரக்டர் ஷங்கர் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு மக்களைக் கவரும் வகையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டி அவர் மக்களை மிரட்டிவிடுகிறார். அதனால் அவரது படங்கள்...

அஞ்சலி

0
ஓவியம் : ராஜன்

கொலுவில் ‘அப்பூச்சி’

0
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் கல்கி கடைசிப் பக்கம் படிப்பவரா? நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் இந்த வாரம் உங்கள் ராசி பலனைக் கணிப்பது சுலபம். இந்தப் பக்கத்தைப் படித்துக்கொண்டு இருக்கும் ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள்...

அரசு யோசிக்க வேண்டும்

0
உங்கள் குரல் விரைவில் `கல்கி` மின் இதழ் அறிமுகப்படுத்தப் போகும் சந்தா முறையை வரவேற்கும் லட்சக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். (ஆயுட்) சந்தா விவரங் களுக்காகக் காத்திருக்கிறோம். கல்கியோடு இணைந்திருப்பதில்...