உணவு / சமையல்
வேர்க்கடலை சுண்டல்
–ஆதிரை வேணுகோபால்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – ஒரு கப் தனியா – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் 4
தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை– சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு ,பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சை வேர்க்கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். சிறிதளவு எண்ணெயில் காய்ந்த மிளகாய் தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்து பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு+ பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய மல்லித்தழை கறிவேப்பிலை, வெந்த வேர்க்கடலையை போடவும். இதில் பொடித்த மசாலா மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். வாசமான பச்சை வேர்க்கடலை சுண்டல் ரெடி.