online@kalkiweekly.com

spot_img

5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 33 லட்சம் பேர் இலக்கு!

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தெரிவித்ததாவது:

கடந்த மாதம் 12ஆம் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அந்த முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதையடுத்து கடந்த 19-ம் தேதி நடைபெற்ற 2-வது தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும், 26-ம் தேதி நடைபெற்ற 3-வது கட்டமாக நடந்த முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அதையடுத்து 4-வது மெகா தடுப்பூசி முகாமில் தமிழகத்தில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 5-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

-இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வுமையம்!

0
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கையில் தெரிவித்ததாவது: வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக,...

டி23 புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை!

0
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கிக் கொன்ற டி23 புலியை நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறீயதாவது:   கடந்த 22 நாட்களாக தேடுதல்...

உலகில் கொரோனா உயிரிழப்பு குறைகிறது: உலக சுகாதார அமைப்பு!

0
உலகில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்ததாவது: உலக...

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

0
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில், 1993 முதல் 2001-ம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தவர் பில் கிளிண்டன். அமெரிக்காவின்...

கபடி விளையாடி சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் எம்.பி!

0
மகாராஷ்டிராவின் மாலேகான் என்ற இடத்தில், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகி, 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் பாஜக பெண் பிரமுகர் பிரக்யா தாக்குர் (51)...
spot_img

To Advertise Contact :