6 பந்துகளை வாயில் அடக்கி கின்னஸ் சாதனை படைத்த நாய்!

6 பந்துகளை வாயில் அடக்கி கின்னஸ் சாதனை படைத்த நாய்!
Published on

கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று தன் வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பின்னிபாய்மோலி என்பவர் வளர்த்து வரும் இந்த நாயைப் பற்றிய செய்தியையும் போட்டோவையும் கின்னஸ் சாதனை புத்தகத்துடனும் இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:

இது மிகப் பெரிய சாதனைதான். என் செல்ல நாய்க்குட்டி செய்த இந்த கின்னஸ் சாதனையை நானே செய்ததுபோல் உணர்கிறேன்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017-ம் முதலில் பின்னிபாய்மோலியின் தந்தை இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வந்த நிலையில், இந்த நாய் வாயில் டென்னிஸ் பந்துகளை அனாயாசமாக கேட்ச் பிடிப்பதை அறிந்து, அதற்கு முறையான பயிற்சியளீக்கத் தொடங்கினாராம்.

''இதையே ஒரு சாதனையாக ஏன் செய்யக்கூடாது என்ற யோசனை தோன்றியது. எனவே கோல்டன் ரெட்ரீவருக்கு தினமும் பயிற்சி அளித்து வந்தோம். என் தந்தைக்குப் பின்னர் நான் பயிற்சியை தொடர்ந்தேன். உண்மையில் இந்த கின்னஸ் சாதனையை 2020-ம் ஆண்டே எங்கள் நாய் படைத்து விட்டது. ஆனால் அதற்கான சான்றிதழ் இப்போதுதான் கிடைத்துள்ளது

இவ்வாறு பின்னிபாய்மோலி.தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com