700 கைதிகள் விடுதலை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு!

700 கைதிகள் விடுதலை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று தமிழக சிறைக் கைதிகளில் 700 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்த நிலையில், இதுகுறித்து அரசாணை வெளிடப்பட்டது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டதாவது:

றை கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகள் கைதிகள் 700 பேரை விடுதலை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் தேர்ந்தெடுத்து விடுதலை செய்யப்படுவார்கள்..

அதேசமயம், பாலியல் வழக்கில் சிக்கியவர்கள், தீவிரவாதம், ஜாதி-மத சண்டையில் தண்டனை பெற்றவர்கள், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். இதனை ஆய்வு செய்யவும் விடுதலைக்குத் தகுதியான 700 பேர் பட்டியலைத் தயார் செய்யவும் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

-இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com