72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: நியூசிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சாதனை!

72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: நியூசிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சாதனை!

இந்தியாநியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுஇதையடுத்து

தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களில் சுருண்டது. அடுத்து இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கி, 276 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது..

 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை துவங்கியது.ஆனால் 4-வது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து. இதன் மூலம் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com