
அமெரிக்காவில் 74 வயதில் விண்வெளி பயணம் மேற்கொண்டு, லாரா ஷெப்பர்ட் சர்ச்லே என்ற பெண்மணி சாதனை புரிந்துள்லார்.
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற விண்வெளி நிறுவனம் வணிகரீதியில் பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. இந்த பயணம் மேற்கொள்வதற்குமுன், பயணிகளை விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகள் கொடுத்து தயார்படுத்தி அழைத்துச் செல்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலமாக சென்று வெற்றிகரமாக விண்வெளி சுற்றுலா சென்று திரும்பியிருக்கிறார் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே. 74 வயதான இவர், அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள் என்பது கூடுதல் சிறப்பு.
''சாகசங்கள் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்று நிரூபிக்கவே இந்த பயணம் மேற்கொண்டேன். அதிலும் என் தந்த ஒரு விண்வெளி வீரர் என்ற வகியில் விண்வெளிப் பயணம் என் கனவாகவே இதுவரை இருந்து வந்தது. அந்த காவே நிறிவேறியதில் மகிழ்ச்சி'' என்கிறார் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே.