7,500 கோடி ரூபாய் முதலீடு: ஏர்டெல் நிறுவனத்தில் செய்தது கூகுள்!

7,500 கோடி ரூபாய் முதலீடு: ஏர்டெல் நிறுவனத்தில் செய்தது கூகுள்!

ஏர்டெல் நிறுவனத்தில் பலவேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் நீண்டகால ஒப்பந்தமாக ரூ.7,500 கோடி கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் ரூ.7,500 கோடியை பல்வேறு திட்டங்களுக்காக முதலீடு செய்துள்ளதாகவும் ஏர்டெல் பங்குகளில் 1.28 சதவீதத்திற்கு உரிமையாளராக கூகுள் இருக்கும் என இரண்டு நிறுவனங்களின் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல் கூறியதாவது;

ஏர்டெலின் எதிர்கால திட்டங்கள், டிஜிட்டல் தளங்கள், விநியோகம் மற்றும் கட்டண அமைப்பு ஆகியவற்றுடன், இந்தியாவின் டிஜிட்டல் அமைப்பின் எல்லையை விரிவுப்படுத்த கூகுளுடன் ஈனைந்து பணீயாற்ற திட்டமிட்டுள்ளோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இதுகுறித்து கூகுள் நிறூவனத்தின் சி.ஈ.ஓ-வான சுந்தர் பிச்சை கூறியதாவது;

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களை அதிகரிக்க ஏர்டெலுடன் கூகுள் இணைந்துள்ளது. குப்பாக, 5 ஜி இணையத்தின் மூலம் உருவாகும் பல புதிய தொழில்களுக்கு உறுதுணையாக ஏர்டெல்லுக்கு  கூகுள் செயல்படும்.

-இவ்வாறு கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இதையடுத்து இந்தியப் பங்குச் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com