online@kalkiweekly.com

80S கிட்ஸ் மிட்டாய், 2K கிட்ஸ் சாக்லேட்!

சில வாரங்களுக்கு முன் நாளிதழ்களில் ‘எளிய காலங்களுக்கு ஒரு புகழ் மாலை’ என்ற பிரிட்டானியா கம்பெனி விளம்பரம் ஒன்று லீ பக்கம் வந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம்.

அதில் மிட்டாய் வாங்க 50 பைசாவைச் சேர்த்து கமர்கட், தேன் மிட்டாய் வாங்கக் கடைக்குச் சென்றது, வானொலியில் கிரிக்கெட் கமெண்டரி கேட்பது, பீச் சுண்டல், சினிமாவிற்குச் சென்றது என்று ‘நாஸ்டல் ஜியா’ வைப்பட்டியலிட்டு பழைய காலங்களைத் திரும்பப் பெற முடியாது என்றாலும், மீண்டும் ‘பழைய மில்க் பிக்கீஸ்’ வரப் போகிறது என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

என் பள்ளி நாட்களில் வானொலியில் இந்த பிஸ்கெட் விளம்பரத்தைக் கேட்டிருக்கிறேன். இதைப் படிக்கும்போது ராகத்துடன் படித்தீர்கள் என்றால் நீங்கள் ‘80’S கிட்ஸ்’!

பள்ளியிலிருந்து திரும்பும் சிறுவர்

பரவசமுடனே சுவைப்பது என்ன?

பிரிட்டானியா மில்க் பிக்கீஸ்!

விளையாடியபின் குஷியோடு வளரும்

சிறுவர் சுவைப்பது என்ன?

பிரிட்டானியா மில்க் பிக்கீஸ்!

பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சாயங்காலம் உப்புமாவையோ, தோசையையோ வாயில் அடைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடப் போய்விடுவோம். விளையாடிய பின் குஷியோடு தெருவோரம் இருக்கும் ‘சோழியன் கடையில்’ ஜவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், கமர்கட் போன்ற வஸ்துக்களைத் தான் வாங்கிச் சாப்பிடுவோம். மில்க் பிக்கீஸ் சாப்பிட்டது இல்லை.

இன்று இந்த மிட்டாய்கள் எங்கே கிடைக்கும் என்று கூகிளைத்தான் கேட்க வேண்டும். இன்றைய ‘2k கிட்ஸ்’களுக்குச் சிலவற்றைச் சிறு குறிப்புகளுடன் இந்த வாரம் கொடுத்திருக்கிறேன்.

ஜவ்வு மிட்டாய் – பஞ்சு மிட்டாய் நிறத்தில் பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றி இருக்கும். யூரேனியம் போன்ற வஸ்துவைக் கூடப் பிரித்து எடுத்துவிடலாம். ஆனால் ஜவ்வு மிட்டாய் மீது ஜெயராஜ் வரைந்த ஓவியத்தின் மேலாடை போன்ற பிளாஸ்டிக் பேப்பரை பிரித்து எடுப்பது என்பது முடியாத காரியம். பிரித்த பின், அதன் ‘ஸ்டாட்டிக் எலெக்ட்ரிக் சிட்டி’யினால் முழங்கையில் இருக்கும் ரோமங்கள் முதல் காதல் ஏற்பட்ட மாதிரி எழுந்து நிற்கும். சின்ன பேப்பர் துண்டுகளைப் போட்டு டான்ஸ் ஆட வைப்பது அன்றைய பொழுதுபோக்கு.

ஜவ்வு மிட்டாய் கடித்தபின் மேல்-கீழ்வரி சைப்பற்கள் இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இழுக்கும்போது பல் ஈறு லேசாக வலிக்கும். பல் இடுக்கில் எல்லாம் மாட்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரேஷனில்தான் வெளியே வரும். கடைசியில் மணல் மாதிரி நறநற என்று வந்தல் ஜவ்வு மிட்டாய் முடிந்து விட்டதன் அறிகுறி. அந்தச் சமயம் வாய் முழுக்க ரோஸ் கலர் லிப்ஸ்டிக்குடன் திருமண ரிசப்ஷன் பெண் போலவே இருப்பீர்கள்.

தேன் மிட்டாயில் தேன் இருக்காது. ஆரஞ்சு நிறத்தில் (மைதா மாவு என்று நினைக்கிறேன்.) உருண்டை; உள்ளே உடைத்தால் முற்றிய நுங்கில் தேங்கியிருக்கும் இரண்டு சொட்டு நீர் போலச் சர்க்கரைப்பாகு இருக்கும்; அது தான் தேன். பழைய ஸ்டாக் என்றால் பாரதிராஜாவின் படத்தில் காட்டப்படும் காய்ந்த விரிசல் விட்ட கரிசல்காட்டு பூமி போல் காட்சியளிக்கும்.

கமர்கட்டை வாயில் போட்டு ஒரு பக்கக் கன்னத்தில் அடக்கிவைக்க, கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெல்லம் கரைந்து, தொண்டையில் தேங்காய் வாசனையுடன் உள்ளே இறங்கும். பள்ளியில் ஆசிரியர் பாடம் எடுத்து முடிக்கும் வரை இதைச் சுவைத்துக் கொண்டே இருக்கலாம். வகுப்பு போர் அடிக்காது.

சூடமிட்டாய் இன்றைய போலோவிற்கு முன்னோடி. சாப்பிட்டபின் காற்றை உள்ளே இழுத்தால் தொண்டையில் ஜில் என்ற காதல் கதை சொல்லும். இதில் இன்னொரு வகை பட்டனில் இரண்டு ஓட்டைகளுடன் ‘சர்சர்’ என்று சோடா மூடியில் ரசித்து விளையாடியது போல இதிலும் விளையாடிவிட்டுச் சாப்பிடலாம்.

மண் ஆசை, பெண் ஆசையை ஒழிக்க வேண்டும் என்பார்கள். அவற்றுடன் இலந்தை வடையும் சேர்த்துக்கொள்ளலாம். பார்த்துச் சாப்பிடு, உள்ளே பூச்சி இருக்கும்’ என்ற எச்சரிக்கையையும் மீறி அதன் உப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த சுவை நம்மை அடிமைப்படுத்தும். சரம்சரமாக வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற சின்னச் சின்ன ஆசைகளில் இதுவும் ஒன்று.

‘ரோஸ் மிண்ட் மிட்டாய்’ பாப்பின்ஸ் போன்று அடுக்கப்பட்ட சதுரவடிவ குட்டி மிட்டாய். டைஜீன் மாத்திரை சுவையுடன் சூடமிட்டாய் கலந்த ஒருவிதப் பன்னீர் வாசனையுடன். அதையெல்லாம் அனுபவிக்க வேண்டும், ஆராயக்கூடாது. சமீபத்தில் சென்னை சென்றபோது இதைத் தேடி, ஓர் இடத்தில் கண்டுபிடித்து வாங்கினேன்.

சுவைத்தபோது சிறுவயதில் சாப்பிட்ட சுவையை என் நியூரான்கள் உடனே கண்டு பிடித்து மூளையின் ஏதோ ஒரு பகுதியில் அந்தச் சுவையை அனுப்பி என்னைச் சந்தோஷப்படச் செய்தது!

இன்று ‘மிட்டாய்’ எல்லாம் ‘சாக்லேட்’ மயமாகிவிட்டது. யோசித்துப் பாருங்கள், உங்கள் குழந்தைகள் ‘மிட்டாய்’ என்ற சொல்லையே உபயோகித்திருக்க மாட்டார்கள்!

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

தலையங்கம்

0
தாலிபான் தலைவலி இருபது ஆண்டுளுக்கு முன்பு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்கா முன்னெடுத்த முயற்சியில் முக்கியமானது ஆப்கானிஸ்தானத்தில் அதன் படைகளையும் நவீன ஆயுதங்களையும் நிறுத்தியது. பல மில்லியன் டாலர் செலவிட்டு 20 ஆண்டுகள்...

உங்கள் குரல்

0
அலட்சியம் செய்யாமல் செயல்பட வேண்டும் ‘பாயசம் -எழுத்தும் படமும்’என்ற கடைசிப்பக்கத்தில் சுஜாதா தேசிகனின் எழுத்துக்களைப் படித்ததும் அவை சிந்தனைக்கு விருந்தாக இருந்தது. ‘சாமநாது’என்றால் யார் நமக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் எப்படி ஒளிந்து கொண்டிருக்கின்றது...

தராசு/நீங்கள் கேட்டவை

0
பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஆயில் பாண்டுகள்தான் காரணமா? சண்முகவடிவு, நெல்லை ? பெட்ரோல் விலை ஏற்றத்துக்குக் காரணம் முந்தைய அரசு வெளியிட்ட ஆயில் பாண்டுகள்தான் காரணம் என்கிறாரே நிர்மலா சீத்தாராமன்? முதலில் ‘சர்வதேச சந்தையின் விலையேற்றம்’ என்றார்....

கரும்பலகையைத் தொட்ட கரங்கள் கல் சுமக்கும் கரங்களாகலாமா?

0
சிகரம் சதீஷ்குமார் உலக வரலாறு பற்றிக் குறிப்பிடும் பொழுது, கி.மு., கி.பி. எனக் குறிக்கப்பட்டு வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட கி.மு., கி.பி. எனக்...

ஐஸ்தான் டாப் அழகி

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்...!11 எஸ்.சந்திரமௌலி மணிரத்னத்தின் இருவர் படம் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான முதல் படம் என்றாலும், அவர் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்துகொண்ட முதல் படம் ‘அவுர் பியார் ஓகையா’ என்ற இந்திப் படம் தான்....
spot_img

To Advertise Contact :

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

Existing Users Log In
   
New User Registration
*Required field