இந்தியாவில் பிரம்மாண்ட பிசினஸ் சாம்ராஜ்ய அதிபதியான ரத்தன் டாடா தனது 84-வது பிறந்தநாளை சின்னஞ்சிறு கேக் வெட்டி நேற்று முன்தினம் (டிசம்பர் 28) கொண்டாடியது வைரலாகியுள்ளது.
டாடா குழுமங்களின் மூன்றாவது தலைவரான ரத்தன் டாடா, சமீபத்தில் ஏர்–இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடமிருந்து விலைக்கு வாங்கியது குறிப்பிடத் தக்கது. 1991-ம் ஆண்டில் டாடா குழுத்தின் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றபின், டாடா குழுமம் அசுர வளர்ச்சி கண்டது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் குடிநீர், உப்பு, டீ, இரும்பு, தாது, தங்க நகைகள், கைக்கடிகாரம், கார், விமானம் என பிரம்மாண்ட பிசினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். அதேசமயம் எளிமையானவரும்கூட! எத்தனையோ விலை உயர்ந்த கார்கள் ரத்தன் டாடாவிடம் இருந்தாலும் உள்ளூரில் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது தங்கள் நிறுவனத் தயாரிப்பான நானோ அல்லது நெக்ஸானில்தான் ரத்தன் டாடா பயணிப்பது வழக்கம்.
உலகப் பணக்காரர்கள் வரிசையில் முக்கிய இடம்பிடித்த ரத்தன் டாடா, டிசம்பர் 28-ம் தேதி தனது 84-வது பிறந்நாளை மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். ஒரு சிறுவனுடன் சின்னஞ்சிறிய கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
A charming scene with the unassuming #RatanTata on his 84th birthday pic.twitter.com/wkmm7jhCyZ
— Harsh Goenka (@hvgoenka) December 29, 2021