9 மாதங்களுக்கு பிறகு குற்றாலத்தில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

9 மாதங்களுக்கு பிறகு குற்றாலத்தில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் குளிக்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவர். இந்நிலையில் கொரோனா கட்டுபாடுகள் காரணமாக குற்றால அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

குற்ராலம் பிரதான அருவியில் ஆண்கள் பகுதியில் ஒரே நேரத்தில் 10 பேர் அனுமதிக்கப்படுவர். அதேபோல் பெண்கள் பகுதியில் 6 பேருக்கு அனுமதி உண்டு. ஐந்தருவியில் இரு பகுதிகளிலும் தலா 10 பேர் ஒரேசமயத்தில் அனுமதிக்கப்படுவர். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்ர்களுக்க்கு மட்டுமே அனுமதி உண்டு.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து 9 மாதங்களுக்குப் பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப் பட்டதால், சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com