ஆலுவேரா பராத்தா

ஆலுவேரா பராத்தா

ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்.

தேவையானவை:

ஆலுவேரா ஜெல் 1/2 கப் ,

கோதுமை மாவு – 2 கப் ,

பச்சை மிளகாய் 3,

கருவேப்பிலை, மல்லி இலை – சிறிது

எண்ணெய். உப்பு – தேவைக்கு

செய்முறை:

சோற்று கற்றாழை ஜெல்லுடன் .பச்சை மிளகாய். கருவேப்பிலை ,மல்லி தழை சேர்த்து விழுதாக அரைத்து கோதுமை மாவுடன் கலந்து உப்பு .தேவையான எண்ணெய், தண்ணீர் சேர்த்து ஒரளவு கெட்டியாக பிசையவும். பின்னர் அநத மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருணடியையும் விசிறி போல் மடித்து ரவுண்டாக்கி .மேலோட்டமாக அழுத்தி சப்பாத்திகளாக தேய்க்கவும். மிதமான சூட்டில் சுட்டெடுக்கவும் .பல் இல்லாதவர்கள் கூட சுலபமாக சாப்பிட முடியும் .ஆறினாலும் மிருதுவாகவே இருக்கும் .ஆலுவேரா சேர்த்திருப்பதால் வெளி அழகு மட்டுமல்லாது உடல் உஷ்ணம் தணிக்கும் .சிறுநீர் பிரச்சனையை கூட சரி செய்யு ம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com