0,00 INR

No products in the cart.

​ஆண்டாள் நாச்சியார் அறிவுத் திறன்!

– வேதவல்லி, புதுச்சேரி

ருமுறை வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள் திருப்பாவை உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்,
‘கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.’
என்ற பாடலைப் பாடிக்காட்டினார்.

இந்தப் பாடலுக்கான பொருள் : ‘அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்குக் கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக் கதவைத் திற’ என்பதாகும்.

அதேபோல், இந்தப் பாடலுக்கான விளக்கம் என்னவெனில், ‘பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில், ‘கேசவா’ என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லி விட்டு, அன்றாடப் பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. கேசவன் என்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்றுதான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி தலத்தை மனதில் கொண்டே ஆண்டாள் நாச்சியார் பாடியருளினாள்’ என்பதாகும்.

ரி… இனி விஷயத்துக்கு வருவோம். இந்தப் பாடலைப் பாடிய வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள், அந்த உபன்யாசத்திலேயே. ‘ ஆனைச்சாத்தன் பறவை இருப்பதாகத் தெரியவில்லை’ என்று கூறினாராம்.

பிரிதொரு சமயம், சஞ்சாரமாகக் கொச்சிக்குச் சென்றிருந்தபோது, மழையில் நனைந்தபடி வெட்டவெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார் ஜீயர் ஸ்வாமிகள். அப்போது வழியில் தென்பட்ட சிறுவன் ஒருவன், அங்கே வந்த பக்ஷிகளைக் கண்டு, ‘இதோ ஆனைச்சாத்தன்’ என்று கூறியபடி ஓடினான்.

அதைக் கண்ட ஜீயர் ஸ்வாமிகள், “இல்லை என்று கூறிய எனக்கு, இதுதான் அந்த ஆனைச்சாத்தன் பறவை என்று உணர்த்தினாயே” என்றபடி அந்தச் சிறுவன் காலில் விழுந்து வணங்கினாராம். அதோடு, ‘சிறுமி ஆண்டாளுக்கு எப்படிப் பறவைக்கூட்டங்கள் பற்றியும் தெரிந்திருந்தது?’ என்றும் வியந்தாராம்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

0
மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...