0,00 INR

No products in the cart.

எங்கள் ரோல் மாடல் 75 வயது மாமி!

எங்கள் எதிர் வீட்டு மாமி கிரிஜா ராகவனுக்கு வயது எழுபத்தைந்து.  ஆனாலும் மனதளவிலும் உடலவிலும் உற்சாகமாக இருக்கிறார்  அவரது ஆகாரம். ஆன்மிக நாட்டம். நடைபயிற்சி ஆகியவை எல்லாமே சிஸ்டமேடிக் ஆக இருக்கும். . காலையில் எழுந்ததும் விளக்கேற்றி வழிபடுதல், பின்பு ஆவியில் வேக வைத்த டிபன் (தட்டுஇட்லி இடியாப்பம்), பாதாம் சேர்த்த இட்லி பொடி தான் சாப்பிடுவார்.காபி ,டீ குடித்தாலும் பழங்களும் ,ராகி கூழும் உண்டு. மதியம், கோதுமை சாதம்,.. சைடு டிஸ்ஸில். காய்கறி கீரைகள் இல்லாமலிருக்காது.

மாலையானால் நடை பயிற்சி.. ஆன்மிக வகுப்பு! இதையெல்லாம் 25 வருடமாக இடைவிடாது செய்கிறார். சமீபத்தில் கல் தட்டி விழுந்ததில் காலில் சிறு ஆப்பரேஷன் ஆனபோதும் அவர் நடைபயிற்சியை விடவில்லை.  மேலும் டி,வி ப்ரோகிராம் கொடுப்பது. விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது. டியுஷன் எடுப்பது, பத்திரிகைகளுக்கு எழுதவது என்று மனதை உற்சாக வைத்துக் கொள்வார். இன்னொரு விஷ்யம் – அவர் மங்கையர் மலரின் நீண்ட வருட வாசகி .இவரது எழுத்துக்கள் ம.மலரில் வெளி வந்திருக்கின்றன்.எங்கள் தெருவாசிகளுக்கு இவரே ரோல்மாடல்.

இதோ நானும் அவரும் இனணந்த புகைப்படம் .சந்தன கலர் புடவையில் .என் பேரன்களை (ரஞ்சன் டாடா குமார். ரத்தன் டாடாகுமார்) ஆசிர் வதிக்கிறாரே அவர் தான் கிரிஜா ராகவன்.

-ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

தூங்கும்போது இது வேண்டாம்

0
இரவில் தூங்கும்போது தலையணைக்கடியில் கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவதால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு  மூளைக்குப் பாதிப்பு ஏற்படுத்தி, புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இரவில் அதிக...

சித்தர் மலைக்கு சுற்றுலா!

0
நானும், என் கணவரும் சுமார் இருபது வருடங்களாக யோகா பயிற்சியும், நடைப்பயிற்சியும் தினமும் செய்கின்றோம்.காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் சுடுதண்ணியும், ஐந்து பாதமும் எடுத்துகொள்வோம். பிறகு அருகில் உலக பிட்னஸ் பாத்தில் நாற்பது...

உடல் பளபளக்க எண்ணெய் கொப்பளியுங்க!

0
தினமும் காலை எழுந்ததும் வாய் கொப்பளித்து விட்டு, பின்னர் வாய் கொள்ளும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊர்றி கொள்ளுங்கள். வாயில் அந்த எண்ணெயை  சுமார் 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இடையிடையே கொப்பளிப்பது போல்...

மனதுக்கு மருந்து தியானம்!

0
மனதில் கவலைகள் கடலெனப் புகுந்தால், அதனால் ஏற்படும் சஞ்சல அலைகளால், உடல் ஆரோக்யம் புரட்டிப் போடப்படும்! தாறுமாறாக ரத்தக் கொதிப்பு ஏற்படும். இதயம் பலவீனமாகும். மனம் களைப்படைந்தால் உடலும் களைப்படையும். அதனால் மனதை...

மனதின் குப்பை எது?

0
மனம் ஆரோக்கியமாக இருந்தாலே  உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே மனதை நல்ல‌விதத்தில் வைத்துகொள்ளவேண்டும். வீட்டில் குப்பைகளை நாம் சேர்த்து வைப்பதில்லை. அதனால் நம் ஆரோக்கியம் கெட்டு‌விடுமென்பது தெரியும்.. அது சரி..  மனதின் குப்பை...