
மன ஆரோக்கியத்திக்கு சிறந்தது மனம் விட்டு சிரிப்பது தான். மனசில் கவலைகள் அழுத்தும் போது பத்து நிமிடங்கள் காமெடி சேனல் பாருங்களேன். சிரிக்க சிரிக்க கவலைகள் கரைந்து விடும். நான் எப்போதும், உற்சாகமாக இருப்பதற்கு காரணம் காமெடி சினிமாக்களை அதிகம் விரும்புவதே..நான் ரசித்த காமெடிகளை பக்கத்து வீட்டுப் பெண் மஞ்சுவிடம் ஷேர் செய்வேன். அவளும் குலுங்கி சிரித்து விட்டு "அம்மா ..ரிலாக்ஸாக இருக்கும்மா "என்பாள்.நமக்கு மட்டுமல்ல.. நம்மை சுற்றியிருப்பவர்களின் மன ஆரோக்கியத்திற்கு பக்க விளைவுகள் இல்லா பக்கா வைத்தியம் சிரிப்பே.நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாய்வது போல், அதே சிரிப்பு உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் பலனைத் தரும். சிரிங்க .. சிரிங்க..சிறப்பாய் வாழலாம்!
– என்.கோமதி, நெல்லை-7.