மனதின் குப்பை எது?

மனதின் குப்பை எது?

மனம் ஆரோக்கியமாக இருந்தாலே  உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே மனதை நல்ல‌விதத்தில் வைத்துகொள்ளவேண்டும். வீட்டில் குப்பைகளை நாம் சேர்த்து வைப்பதில்லை. அதனால் நம் ஆரோக்கியம் கெட்டு‌விடுமென்பது தெரியும்.. அது சரி..  மனதின் குப்பை என்ன? தேவையற்றவைகளை மனதில் வைத்துக்கொள்வதான்! வீட்டு குப்பைகளை நீக்குவது போல, மனதின் குப்பைகளியும் அவ்வப்போழுது நீக்கிவிடவேண்டும்.

நமக்கு‌ யாரவது தீங்கு இழைத்தால்  அது நம் மனதை‌ பாதிக்காமல் பார்த்து கொள்ளவேண்டும். அது அத்தனை‌ எளிதல்லதான்.  ஆனால் முடியாதது இல்வை. ஒன்று – அந்த சம்பவத்தை‌மறக்க வேண்டும் அல்லது அந்த‌சம்பவத்திற்கு‌ காரணமானவரை மன்னிக்க வேண்டும். இது அத்தனை‌சுலபமல்ல.

அதனால்எது நடந்தாலும்‌ நன்மைக்கே என்று‌உறுதியாக எண்ணத் தொடங்கி விட்டால், எந்த பிரச்சினையும் நம்மை பெரிதாக பாதிக்காது. ஆரோக்கியம் தான் உலகத்தில்‌ பெரிய சொத்து

-ராஜலட்சுமி கௌரிசங்கர், ஆண்டாள்புரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com