ஆவின் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள்; முதல்வர் அறிமுகம்!

ஆவின் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள்; முதல்வர் அறிமுகம்!

Published on

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள நூடுல்ஸ் உள்ளிட்ட பொருள்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு..ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்தார்.

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் ஏற்கனவே பால், குலோப் ஜாமுன், பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனையில் உள்ள நிலையில் இன்று அந்நிறுவனத்தின் மேலும் சில புதிய தயாரிப்புகளான அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற்து. அந்த வகையில் ஆவின் நிறுவனத்தில் புதிய தயாரிப்புகளான நூடுல்ஸ், பிரிமியம் மில்க் கேக், குளிர்பானம், யோகர்ட், பாயாசம் மிக்ஸ், உள்ளிட்ட பொருள்களை முதல்வர் மு..ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Kalki Online
kalkionline.com