80 YEARS OF KALKI



KALKI GROUP

சுதந்திரப் போராட்டக் காலம். இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் தேசிய உணர்வு ததும்பிக் கிடந்த சூழ்நிலை.

ஸ்ரீ வள்ளி நாடகத்தில் முருகன் வேடம் ஏற்ற கலைஞர் ஒருவர் திடீரென்று, ‘ராட்டினமே காந்தி கை பாணம்’ என்று பாடியபோது ரசிகர்கள் நாடி நரம்புகள் முறுக்கேற சேர்ந்து பாடினார்கள்; கை தட்டித் தீர்த்தார்கள்.

கதாகாலட்சேபத்தின் முடிவில்,

பாரத மாதாவுக்கும்
பக்தியுள்ள இந்தியர்க்கும்
காரணமான மகான்
காந்தியடிகளுக்கும்
நித்யானந்த மங்களம்
சுப மங்களம்”


என தெய்வ பக்திக்கு தேசபக்தியைக் கொண்டு முத்தாய்ப்பு வைப்பது இயல்பாய் நிகழ்ந்தது. தீண்டாமை ஒழிப்பு, கள்ளுண்ணாமை, பெண்கள் கல்வியுடன் சமத்துவம் என்று சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பகிரங்கமாய்ப் பிரசாரம் செய்த திரைப்படங்களிலும்

“பந்தமகன்று நம் திருநாடு
உய்ந்திட வேண்டாமோ!
அதிர்ந்தொலித்தல் கேளாய் – சங்கம்
ஆர்த்திடும் முரசம் கேள்…”


என்று இசைப் பாடல் தேசிய அரைகூவல் விடுத்தது. இத்தகைய சூழ்நிலையில் பிறந்த ஒரு பத்திரிகைக்கு தேச நலனே பிரதான நோக்கமாக அமைந்ததில் வியப்பில்லை.

தேசநலன் என்பது விடுதலையால் மட்டுமே விளைந்து விடாது; நமது ஒவ்வொரு செயலும் ஈடுபாடும் மொழியும் கல்வியும் கலையும் அதற்குப் பாடுபட வேண்டும் என முற்றிலும் உணர்ந்த தீர்க்கதரிசிகள் ஐவர், கல்கி இதழின் இலக்கை நிர்ணயித்து நெறிப்படுத்தினார்கள் – கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி. சதாசிவம், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, ராஜாஜி, டி.கே.சி., என்ற அந்த ஐந்து பேரையும் இணைத்தது தேச பக்தி மட்டும் அல்ல… கலை ஆர்வமும் உயர் ரசனையும்கூட.

‘இந்தப் பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் உண்டு… முதல் நோக்கம் தேச நலன்; இரண்டாவது நோக்கம் தேச நலன்; மூன்றாவது நோக்கமும் தேச நலன்தான்’ என்று 1941 ஆகஸ்ட் முதல் கல்கி இதழில் எழுதினார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. சமூக அவலங்களைக் களைந்து புதுயுகம் படைக்கும் உயர்நோக்குடன் அவர் ஏற்ற பத்தாவது அவதார புனை பெயரே பத்திரிகையின் பெயராகவும் அமைந்தது. பரதன் பப்ளிகேஷன்ஸ் கீழ் கல்கி குழுமமும் உருவானது.

காலப்போக்கில் மேலும் நான்கு பத்திரிகைகள் வெளிவந்தன – மங்கையர்மலர், கோகுலம் தமிழ், கோகுலம் ஆங்கிலம், தீபம். தனித்துவத்துடனும் தன்னிகரற்ற முன்னோடியாகவும் மிளிர்ந்தன.

கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கத்திற்குப்பிறகு ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக பரதன் பப்ளிகேஷன் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்ட அச்சுஇதழ்கள் நிறுத்தப்பட்டு மின்னிதழ்களாக வெளிவரத் தொடங்கின.

செப்டெம்பர் 2021 முதல்பத்திரிகைகளின்களஞ்சியஉரிமங்கள்அனைத்தையும் கல்கி குழுமம் பெற்றுக்கொண்டது. லக்ஷ்மிநடராஜன் மற்றும் அவரது குழுவினரால் www.kalkionline.com இணையதளத்தில் இன்று இந்த பத்திரிகைகள் மின்னிதழ்களாகத் தோன்றுகின்றன.

Founders

The Kalki Group was established in the year 1941, with the launch of its flagship magazine ‘Kalki’ by Kalki Krishnamurthy, T.S. Sadasivam, M.S. Subbulakshmi, C. Rajagopalachari and T.K.Chidambaram with ‘DesaNalan’ as its vision and mission. To this day, the institution strives to uphold this vision.

M.S. Subbulakshmi acted in the film Savithri as Sage Narada solely for the purpose of financing the journal. Sadasivam became the Founder – Managing Director. Krishnamurthy made the most of the political scenario with his facile pen. Rajaji and T.K.C. guided and shaped the political and literary ideals of the journal.

Over the years, four more magazines were added into the stream, each a pioneer in its own genre, a product of responsible journalism showing no fear or favour while being outspoken in its criticism of men and matters.

Kalkionline.com, a digital venture from the Kalki Group established in September 2021, with the same ideology, aims to serve as an informative, entertaining and interactive platform bringing together millions of like-minded persons from across the globe.

Chennai
September 2021

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.

logo
Kalki Online
kalkionline.com