அதிமுக தலைமை அலுவலகத்தின் புதிய பெயர்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை என அறிவிப்பு!

அதிமுக தலைமை அலுவலகத்தின் புதிய பெயர்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை என அறிவிப்பு!

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக கட்சி நாளை மறுநாள் (அக்டோபர் 17) தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில்,அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 50-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் நாட்டிலும், பிற மாநிலங்களிலும், ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில..

அதிமுக தலைமைக் கழகத்திற்கு "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை" என புதிய பெயர் சூட்ட முடிவெடுக்கப் பட்டுள்ளது.

  • கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும் வகையில், பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல்.
  • பொன்விழா கொண்டாட்ட சிறப்பு இலச்சினை – LOGO – வெளியிடுதல்.

பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை கழக முன்னோடிகளுக்கு அணிவித்தல்.

  • கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு இந்தப் பொன்விழா ஆண்டுமுதல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி, கௌரவித்தல்.
  • கழகப் பொன்விழாவை பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில், காலச் சுருள் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட விளம்பரப் படம் தயாரித்து தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்புதல்.
  • அதிமுக கழக ஆட்சி மீண்டும் மலர்ந்து, வளர்ச்சிப் பாதையில் அமைதியான தமிழ் நாடு உருவாகிட, கழகத்தின் பொன்விழா ஆண்டில் சூளுரைத்து, கழகப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதே எங்கள் பொன்விழா செய்தியாகும்.
  • இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com