
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றர்.
அதிமுக் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சரான
கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள அவரது வீடு உடபட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேலம், சென்னை, தெலங்கானாவில் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய மொத்தம் 57 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்குமுன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.