ஏகே 203 ரக துப்பாக்கிகள்: இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா ஒப்பந்தம்!

ஏகே 203 ரக துப்பாக்கிகள்: இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா ஒப்பந்தம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 21-வது உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று டெல்லி வந்தடைந்தார். அந்தவகையில் இந்தியாவில் .கே 203 ரக துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரஷ்யாவின் பிரபல AK-203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஒப்புதல் உறுதியாகியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் சுமார் 7 லட்சம் AK-203 ரக துப்பாக்கிகளை இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக்கவும் அதற்காக 5000 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேசத்திலுள்ள அமேதியில் இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இன்று ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு மற்றும் இந்திய பாதுகாப்பு தறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com