0,00 INR

No products in the cart.

​அம்பிகையின் அருள்!

வி.ரத்தினா, ஹைதராபாத்

னது அண்ணி அம்பாளின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பூஜைகள் செய்து அம்மனைப் போற்றி பல பாடல்களை உருக்கமாகப் பாடுவார். அதுமட்டுமின்றி; எப்போதும் அம்பாளின் நினைவுடனே இருப்பார். அம்பாளின் அருகாமையை தான் பல முறை உணர்ந்திருப்பதாக வீட்டில் உள்ளவர்களிடம் பல முறை கூறிப் பரவசப்பட்டிருக்கிறார்.

தசரா பண்டிகையின்போது எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற அன்மிக அனுபவம் ஒன்றை சக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சாதாரண நாட்களிலேயே அம்மனை விசேஷமாக வழிபடும் எனது அண்ணி, அம்மனுக்கு விசேஷமான நவராத்திரி பண்டிகை என்றால் விடுவாரா? ஒவ்வொரு நாளும் அம்பிகையை விதவிதமான மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து வணங்கி வந்தார். அதுமட்டுமின்றி, வீட்டிற்கு பூஜைக்கு வரும் பெண்கள் அனைவரையும் அம்பாளாகவே பாவித்து அவர்களை உபசரித்தார்.

வராத்திரியின் கடைசி நாளான விஜய தசமியன்றும் அம்பிகைக்குத் திருப்தியாக பூஜை செய்து முடித்து, அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கும்போது அண்ணன் வேடிக்கையாக, “நிறைவாக பூஜை செய்து முடித்துவிட்டேன் என்று நீயாக திருப்திப்பட்டுக் கொண்டால் எப்படி? நீ செய்த பூஜையை அம்பாள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள் என்பதை நாங்கள் எப்படி நம்புவது?” என்று கேட்டார். அதைக்கேட்ட அண்ணி, “நிச்சயம் எனது பூஜையை அம்பிகை மனதார ஏற்றுக்கொண்டதை இன்று எனக்கு உணர்த்துவார்” என்று உறுதியாகக் கூறினார்.

ன்று மாலை எனது அண்ணி வழக்கம்போல் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றபோது துர்கை அம்மன் சன்னிதியில் ஓரளவே கூட்டம் இருந்தது. தாயாரை வணங்கிவிட்டுத் திரும்பும் சமயம், கருவறையில் அம்மனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அண்ணியை மட்டும் சற்று நேரம் இருக்கச் சொல்லி, அவருக்குப் பூ, வெற்றிலைப் பாக்கு, பழத்துடன் ஒரு அழகான புடைவையையும் தாம்பாளத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அண்ணிக்கு மெய் சிலிர்த்தது. தாம் அன்றாடம் வழிபடும் அன்னை, தாம் செய்த பூஜையில் திருப்தி அடைந்தாள் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை என்பதை உணர்ந்தாள். அதை மெய்ப்பிப்பது போலவே கருவறையில் தாயாரும் புன்னகையுடன் அவளைப் பார்த்து வீற்றிருந்தார். ‘அம்மா’ என்று அழைத்ததும் நம்மை அரவணைக்க ஓடோடி வருபவள் அல்லவா அம்பிகை!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

மாப்பிள்ளை குப்பத்து மணப்பெண்!

- ரேவதி பாலு கொரோனா ஊரடங்கு வந்தாலும் வந்தது வீட்டை விட்டுக் கிளம்பவே முடியாமல் ஜெயில் வாழ்க்கை. தற்போது கெடுபிடிகள் குறைந்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டதால் மூன்று வருடங்களாகப் போக முடியாத குலதெய்வம் கோயிலுக்குச்...

இறைவன் ஏற்கும் விசேஷ நிவேதனங்கள்!

0
lகொல்லூர், ஸ்ரீ மூகாம்பிகைக்கு இரவு அர்த்த ஜாம பூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயமே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. lசிதம்பரம், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா...

​பலன் தரும் ஸ்லோகங்கள்!

0
- எம்.வசந்தா ​உடல் உஷ்ணம் குணமாக... ‘பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம’ பொருள் :...

​தீபப் பலன்!

1
- பொ.பாலாஜிகணேஷ் ‘விளக்கேற்றிய வீடு வீண் போகாது’ என்று கூறுவர். தீபச் சுடருக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச் சுற்றி பாசிடிவ் எனர்ஜி...

​கடவுள் தரிசனம்!

0
- சுந்தரி காந்தி துறவி ஒருவர் ஆற்றில் நீராடிவிட்டு, கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இதை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். நீண்ட நேரம் கழித்து துறவி தியானம் கலைந்து...