அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மக்கள் பேரணி!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மக்கள் பேரணி!

Published on

அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியுமாறும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கட்டாயப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.

வாஷிங்டன் நினைவிடம் முதல் லிங்கன் நினைவிடம் வரை முழக்கம் எழுப்பியபடி பேரணி நடைபெற்றது. முகக்கவசம் அணிவது குறித்து அமெரிக்காவில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அதிபர் ஜோ பைடன் அங்கம் வகிக்கும் ஜனநாயக கட்சி முகக்கவசம் அணியவேண்டும் என வலியுறுத்துகிறது. அதே நேரம் குடியரசுக்கட்சி முன்னிலையில் இருக்கும் பல மாகாணங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படவில்லை.

இந்த நிலையில் முகக்கவசம் அணிவதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் அவரவரின் தனிப்பட்ட உரிமை மற்றும் விருப்பம் என்றும் அவற்றைக் கட்டாயப் படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி மக்கள் பேரணி நடத்தினர்.

logo
Kalki Online
kalkionline.com