அம்மா உணவகத்தை வீடியோ எடுத்த நபர்: திருச்சியில் பரபரப்பு!

அம்மா உணவகத்தை வீடியோ எடுத்த நபர்: திருச்சியில் பரபரப்பு!

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் மல்லிவு விலையில் உணவு வழங்கும் வகையில் 'அம்மா உணவகம்' ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு அந்த வகையில் திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அருகில் செயல்பட்டு வரும் 'அம்மா உணவகத்தில்' திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென்று ஒரு நபர் இந்த உணவகத்துக்கு வந்து அங்குள்ள ஊழியர்களை தரக்குறைவாகப் பேசியவாறு, தன் செல்போன் மூலம் அங்கிருந்த உணவுகளை வீடியோ எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

''500-க்கும் மேற்பட்ட இந்த இட்லிகள் புளித்துப் போய் சாப்பிர அருகதையற்ற நிலையில் இருக்கிரது. அதனால், தமிழக முதல்வர் இந்த அம்மா உணவகத்தை மூட வேண்டும்'' என்று சொல்லிவிட்டு வீடியோ எடுக்க, அந்த நபர்மீது, ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டு, அவர்மீது விசாரணை நடந்து வருகிறது. .

இதுகுறித்து ஸ்ரீரங்கம் பகுதி உதவி ஆணையர் அக்பர் அலி தெரிவித்ததாவது:

திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் அம்மா உணவகம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவர் நேற்று திடீரென அருகேயுள்ள அம்மா உணவகத்திற்குச் சென்று அங்கு வேலைசெய்பவர்களை தரக்குறைவாக பேசியதோடு, வீடியோவும் பதிவு செய்திருக்கிறார்.

இதையடுத்து, அநத உணவகத்திலுள்ள இட்லி உள்ளிட்ட உணவுகளை உணவு பாதுகாப்பு துறை மூலமாக பரிசோதித்ததில், அந்த உணவுகள் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதனையடுத்து அவதூறு வீடியோ எடுத்த நபர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com