சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக விஜய் டிவியில் நடை பெற்று வருகிறது. சினிமாவிற்க்கு பல இளம் பாடகர்களை இந்த நிகழ்ச்சி அறிமுகம் செய்துள்ளது. பல சீசனை கடந்து வந்த இந்த நிகழ்ச்சி இப்போது சீசன் ஒன்பதில் இருக்ககிறது. இந்த சீசன் ஒரு உணர்ச்சியின் மேடையாக மாறியுள்ளது. கடந்த வார நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்வான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-9 நிகழ்ச்சியில், இளம் சிறுமி சனு மித்ரா தனது அற்புத குரலில் அனைவரையும் ஈர்த்து வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில் அவரின் கதையை பகிர்ந்து கொண்டபோது, மொத்த அரங்கமும் சோகத்தில் ஆழந்தது சனு மித்ராவின் இசை ஆசைக்கு, உறுதுணையாக இருந்த பாசமிகு தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவரைக் கூட்டி வந்து செல்கையில், விபத்தில் இறந்த சோகத்தை பகிர்ந்து கொண்டார்.
சூப்பர் சிங்கர் இசைப்போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனும் அவரது தந்தையின் கனவை தன் தாயின் துணையுடன் போராடும் சனு மித்ராவின் பயணம் அனைவரையும் உருக வைத்தது.
இதைத் தொடர்ந்து தொகுப்பாளிணி பிரியங்கா, என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா தான் தந்தையை போல் பார்த்து கொண்டார். தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து, ஆசிர்வதிப்பார் என்று ஆறுதல் சொன்னார்.
இந்நிகழ்ச்சியில் நீதிபதியாக இருந்து வரும் இசையமைப்பாளர் தமன், தன் தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டார், என் ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என் தந்தை என்னுடைய 9 வயதில் தவறிவிட்டார் என தன் சோகத்தை பகிர்ந்தவர், சனுவிடம் “நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம், எதற்கும் கவலைப்படக்கூடாது” என்று ஆறுதல் கூறினார். மேலும் ஆண்டனி தாசன் அவர்கள் அந்த சிறுமியின் துக்கத்தைப் போக்கும் விதமாக, அவர் தந்தை குறித்து ஒரு அருமையான பாடலை பாடி அனைவரையும் உருகவைத்தார்.
இந்த வாரம் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்ததாக அமைந்தது. நம்மை சிரிக்க வைக்கும் கலைஞர்கள் பலருக்கு மனதில் சொல்லப் படாத சோகம் இருக்கும் என்பார்கள் இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதை பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக மேடையை தனது செயல்பாடுகளால் சிரிக்க வைக்கும் ப்ரியங்காவிற்க் குள் இப்படி ஒரு அப்பாவை இழந்த சோகம் இருப்பது நம் வீட்டு பெண்ணிற்கு இருப்பதை போல் ரசிகர்கள் உணர்கிறார்கள்.