வெள்ளித்திரை

‘விஜய்க்காக மட்டும்தான் அந்தப் படத்தில் நடித்தேன்’ பிரபல நடிகர் புலம்பல்!

கல்கி டெஸ்க்

பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து பலவித விமர்சனங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் ஏராளமான பிலபலங்கள் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பால் ரசிர்களின் மத்தியில் ஆர்வம் பெருமளவில் இருந்தது. ஆனால், இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு அனைத்தும் புஸ்வானமாகப் போய்விட்டது. முக்கியமாக, இந்தப் படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்ற செய்தி பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி இருந்தது. ஆனால், படத்தில் குஷ்பு இடம்பெறும் காட்சியே இல்லை. அதேபோல், பெயருக்கு கதாநாயகி என்று போட்டுவிட்டு ராஷ்மிகாவையும் மொத்தமாக வீணடித்திருக்கிறார்கள்.

மேலும், இந்தப் படத்தில் பலரது கதாபாத்திரங்கள் அவசியமில்லாததாகவும், ‘ஏன்’ என்று கேட்கும்படியும் இருக்கிறது. அதிலும் நகைச்சுவை நடிகர் சதீஷின் கதாபாத்திரம் படு வேஸ்ட். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நடிகர் சதீஷ் வெளிப்படையாகவே பேசி உள்ளார். “வாரிசு படத்தில் எனது கதாபாத்திரம் படு மொக்கை என்பது எனக்கே தெரியும். ஆனால், விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் படத்தில் நாமும் நடிக்கிறோம் என்பதற்காகவே நான் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தக் கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவிதமான பெரிய ஸ்கோப்பும் இல்லை எனக்கு முன்பே தெரியும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

பல முன்னணி நடிகர், நடிகைகள் வாரிசு படத்தில் நடித்திருந்தாலும் அவர்கள் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள். ‘சம்பிரதாயத்துக்காக நடிகர், நடிகைகளை ஒரு படத்தில் நடிக்க வைப்பதில் இருந்து எப்பொழுதான் இந்தத் தமிழ் சினிமா உலகம் வெளிவருமோ’ என்று பலரும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். ‘பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் இதுவெல்லாம் சகஜம்தானே’ என்றபோதிலும், ‘வாரிசு’ படம் தற்போது பலவித மோசமான விமர்சனங்களை சந்தித்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. இனியாவது இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வாரா நடிகர் விஜய்?

கங்குவா - என்னத்த சொல்ல?

முயற்சியும் திறமையும் நம் மதிப்பை உயர்த்தும்!

Biggboss 8: பெண்கள் இடுப்பில் கைவைத்து நிற்க வேண்டும்… இதலாம் ஒரு டாஸ்க்கா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

பிரண்டைத் துவையல் பெருகும் பலன்கள்!

பாகிஸ்தானின் மறைமுக எச்சரிக்கை... சாம்பியன்ஸ் ட்ராபி இந்தியாவில் நடைபெறவுள்ளதா?

SCROLL FOR NEXT