ShaitaanTeaser  
வெள்ளித்திரை

அமானுஷ்ய வசனங்களுடன் ஷைத்தான் மாதவன்.. பதறி போகும் ஜோதிகா.. வெளியானது ஷைத்தான் பட டீசர்!

விஜி

திகில் காட்சிகள் நிறைந்த ஷைத்தான் பட டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தமிழில் தனக்கேற்ற கதாபாத்திரங்கள் வருவதில்லை என கூறிய ஜோதிகா, மற்ற மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான காதல் தி கோர் படம் பாராட்டுகளைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வந்தார். தற்போது பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவரது நடிப்பில் அடுத்ததாக ஷைத்தான் என்ற பாலிவுட் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார்.

த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஜய் தேவ்கன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார். ஷைத்தானாக மிரட்டும் மாதவனின் தோற்றமும், அச்சத்துடன் பார்க்கும் ஜோதிகாவின் முகமும் டீசரை கண் இமைக்காமல் பார்க்க செய்கிறது.

இந்த டீசர் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை ஜோதிகா, வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி படம் ரிலீஸாவதை குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஷைத்தான் எனும் பெயருக்கேற்றபடி, ஷைத்தான் இந்த டீசரில் உரை நிகழ்த்துவது போல அமைந்துள்ளது. ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி, நரகத்தை ஆள்பவன், நானே விஷம், நானே மருந்து என அமானுஷ்ய வசனங்களுடன் தொடங்கி ரசிகர்களை நடுங்க செய்கிறது. மேலும் ஒரு விளையாட்டு விளையாடலாமா? என பில்லி சூனிய பொம்மை, மாதவன் சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT