வெள்ளித்திரை

பிஸினஸ் முதலீடு செய்யும் பிரபல நடிகைகள்!

மும்பை பர பர...

மும்பை மீனலதா

பிரபல நடிகைகள் சினிமாவை மட்டுமே நம்ப இயலாது என்கிற காரணத்தினால் பிஸினஸில் முதலீடு செய்து வருகின்றனர்.

தனது கேரியரின் டாப்பில் இருக்கும் தீபிகா படுகோனே, முதலீட்டாளராக மாறி இருக்கிறார். டிரம் ஃபுட்ஸ் என்கிற நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முதலீடு செய்துள்ளார். இது குறித்து அவர், “தொழில் குடும்பத்தில் நானும் ஒரு பகுதியாக இணைவதில் மகிழ்வடைகிறேன். இப் பொருட்களை விரும்புவதோடு மட்டுமல்லாமல், இந்த பிராண்டின் நோக்கம் பெரிதாக என்னை ஈர்த்துள்ளது. மிகப் பெரிய விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுள்ள இக்குழுவினருடன் இணைந்து பணி செய்வது உற்சாக மளிக்கிறது. இதன் புதிய தயாரிப்புகள் விரைவில் பல நகரங்களில் அறிமுகம் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

டிகை ஐஸ்வர்யாராய் பச்சன், தனது தாயார் விருந்தாவுடன் இணைந்து பெங்களூருவில் இருக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ ஒரு கோடி முதலீடு செய்திருக்கிறார்.

மாதுரி தீட்சித்

‘பேபி ஓயே’ என்கிற இணைய சில்லறை வணிகத்தில் நடிகை கரீஷ்மா கபூர், குழந்தைகளுக்கான பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதில்
26% பங்குகளுக்கு இவர் சொந்தக்காரர் எனக் கூறப்படுகிறது.

பிரபலமாக இன்று விளங்கும், பலரும் அணிந்து கொள்ளக்கூடிய ‘டெக்னாலஜி கேட்ஜட்ஸ்’ மற்றும் ஃபிட்னஸ் Pantகளை உருவாக்கும் பிராண்டில் 2014ஆம் ஆண்டிலேயே முதலீடு செய்திருக்கிறார் நடிகை மாதுரி தீட்சித்.

பாலிவுட், ஹாலிவுட் என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, 2018ஆம் ஆண்டிலேயே பம்பின் என்கிற டேட்டிங் ஆப் இல் முதலீடு செய்திருக்கிறார். இதில் Brand அம்பாஸிடராகவும் செயல்பட்டு வருகிறார்.

பிரியங்கா சோப்ரா

மேலும், கோடிங் கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப்-ன், ஹோல் பெர்டன் ஸ்கூல் என்கிற நிறுவனத்திலும் முதலீட்டாளராக  இருக்கிறார். பாலியல்  வேறுபாடுகளைக் களைய தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் சமூகத்தில் இவை ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தில் ஓர் அங்கமாக செயல்பட வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறதென பிரியங்கா சோப்ரா கூறியிருக்கிறார்.

(”காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!” என்கிற பழமொழி போல, காசு கையில் புரள்கையில், தொழிலில் முதலீடு செய்வது நல்லதுதானே! சினிமா என்றும் நிலையானதல்ல என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். சூப்பர்.)

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

SCROLL FOR NEXT