தமிழ் சினிமாவில் பல படங்களில் வளரும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் பார்வதி நாயர். சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் லேப்டாப், செல் போன் உட்பட சில பொருள்கள், மற்றும் சில லட்சம் பணம் திருடு போய் விட்டது.
இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தன் வீட்டில் பணி புரிபவர் மீது புகார் அளித்துள்ளார். காவல் துறையும் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில ஊடகங்கள் பார்வதி நாயரை மையப்படுத்தி பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
"தனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பேன் என்கிறார் பார்வதி. நடிகை என்பவரும் ஒரு பெண் தான் என்பது நம்மில் பலர் மறந்தது ஏனோ?
பார்வதி நாயர் தன் வீட்டில் பணி புரியும் சுபாஷ் சந்திர போஸ் இந்த புகாரை அளித்துள்ளார். பார்வதி ஆண் நண்பர்களுடன் தனது வீட்டில் மது விருந்து நடத்தியதாகவும், இதை தான் ஒருவேளை வெளியில் சொல்லிவிடுவேன் என்று பயந்து இது போன்ற திருட்டு புகாரை அளித்துள்ளதாக சுபாஷ் மீடியா முன் தெரிவித்தார்.
சுபாஷ் கூறுவது முற்றிலும் பொய். தன் தவறை மறைக்க சுபாஷ் தன் மீது அவதூறு சுமத்துகிறார் என்று சொல்கிறார் பார்வதி. சொல்வதோடு மட்டுமின்றி, சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் சுபாஷ் மீதும், இந்த பிரச்சனையில் தொடர்புடைய மற்றொரு நபரான செல்டன் ஜார்ஜ் என்பவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன்னை பற்றிய தவறான தகவல்களை மீடியாவில் இருந்து நீக்க உத்திரவிடும் படியும் நீதிமன்றத்தை கேட்டு கொண்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துளார் பார்வதி. விரைவில் இந்த பிரச்சனையிலிருத்து மீண்டு பார்வதி வெளியே வருவார் என்று நம்புவோம்.