விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கான், ஜோதிகா மற்றும் மாதவன் நடித்து நேற்றுத் திரைக்கு வந்தப் படம் சைத்தான். இப்படம் எதிர்பார்ப்பைவிட அதிக வசூலை ஈட்டியுள்ளது.
திரில்லர் படங்கள் என்றாலே இப்போது சினிமாவில் மாஸ் ஹிட் ஆகிறது. விஷ்ணு விஷால் நடித்து தமிழில் வெளியான ராட்சசன் படத்திலிருந்தே சைக்கோ திரில்லர் படங்கள் ரசிகர்களை ஈர்க்கிறது. அதுவும் சைக்கோ திரில்லருடன் சேர்ந்துப் பேய் படம் என்றாகும்போது சொல்லவே தேவையே இல்லை. சமீபத்தில் வெளியானப் போர் தொழில், ரணம், சுப் (chup) , நெற்றிக்கண் ஆகிய படங்கள் தரமான திரில்லர் படங்களின் உதாரணங்கள் ஆகும்.
அந்தவகையில் பாலிவுட்டில் அஜய் தேவ்கான், ஜோதிகா இணைந்துத் தயாரித்த சைத்தான் படம் நேற்றுத் திரையரங்கில் வெளியானது. இப்படம் குஜராத்தி படமான 2023ம் ஆண்டு வெளியான வஷ் படத்தின் ரீமேக் ஆகும். சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து மும்பை, லண்டன் மற்றும் மிசௌரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து. பின்னர் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்து போஸ்ட் ப்ரொடக்ஸன் வேலைகளைப் படக்குழு ஆரம்பித்தது. அந்தவகையில்தான் நேற்று படம் வெளியானது. முதல் நாளில் 10 கோடி மட்டும்தான் வசூலாகும் என்றுக் கணித்தப் படக்குழுவிற்கு ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்தது. அதாவது சற்றும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு 14.5 கோடிகள் வசூல் செய்துப் பட்டையைக் கிளப்பியது.
ஜோதிகாவின் 36 வயதினிலேயே, சமீபத்தில் வெளியான காதல் தி கோர் ஆகிய படங்கள் ஃபீல் குட் படங்களாக இருந்து ரசிகர்களைத் திருப்தி செய்தாலும், அவ்வளவாக வசூல் செய்யவில்லை. ஆனால் சைத்தான் படம் அவருடைய சிறப்பான கம்பேக் என்றே கூறலாம்.
மாதவன் இதுவரை நடித்திடாத ஒரு புதிய கோணத்தில் நடித்திருக்கிறார். அதற்கு ஈடுக் கொடுக்கும் வகையில் அஜய் தேவ்கானும் நடித்துள்ளார். ஒரு செம்மையானத் திரில்லர் படமாக சைத்தான் உருவாகிய நிலையில் பார்க்கும் ரசிகர்களை அச்சப்படுத்தும் விதமாக படம் அமைந்துள்ளது. எதிர்பாராத ஒவ்வொரு திருப்பங்களும், பக்காவான க்ளைமக்ஸ் காட்சிகளும் ஹிட் ஆக பெரிய காரணங்களாக மாறின.
முதல் ஷோவின் ரிவ்யூ மிகவும் பாசிட்டிவாக இருந்ததால் உடனே அடுத்தடுத்த ஷோவிற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. மேலும் சரியான நேரத்தில் வார இறுதி நாட்களும் வந்துவிட்டதால் இன்னும் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெரும் என்பதில் சந்தேகமில்லை.