வெள்ளித்திரை

ஹே சகோ இசை ஆல்பம்: நம்பிக்கையூட்டும் யோகேஸ்வரன்!

கல்கி

-ராகவ் குமார்.

சினிமா பாடல்கள் மட்டுமே மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில், இப்போது தனி இசை ஆல்பங்களும் பெரும் வரவேற்பைப் பெறத் துவங்கியுள்ளன. 

இந்த  சுயாதீன இசையமைப்பாளர்கள் (Independent music composer) பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார்கள்அந்த வகையில் சமீபத்தில் கிருஷ் கதிர் ஜெய் உருவாக்கியுள்ள ஹே சகோ என்ற தனி இசை ஆல்பம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'ஹே சகோ'வில் யோகேஸ்வரன் என்ற சிறுவன் பாடி நடித்துள்ளான்இந்த சிறுவனின் இசை மற்றும் நடிப்பு ஆர்வத்தை பார்த்த இவனது பெற்றோர்கள் ராகுராமன்சங்கீதா,  தங்கள் மகனுக்காக இந்த ஆல்பத்தை சொந்தமாகத் தயாரித்துள்ளனர். 

விளிம்பு நிலை மக்கள், மாற்று திறனாளிகள், மூன்றாம் பாலினதவர் ஆகியோருக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை இந்த ஆல்பம் விதைக்கிறது.போலீஸ் வேலைக்கு செல்லும் நம்பிக்கை கொண்ட திருநங்கையாக நடிகை சரண்யா வெங்கடேஷ் சிறப்பாக நடித்துள்ளார்.   

'ஹே சகோ'வின் ஆல்பம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சினிமாவுலகப் பிரபலங்கள்  கே. ராஜன், இயக்குனர் ராஜு முருகன், பாடகர் உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சிறுவன் யோகேஸ்வரனின் இந்த முயற்சியையும், அவனது பெற்றோர்களின் ஆதரவையும் பாராட்டினார்கள்.

மாற்று சினிமாபோல, யோகேஸ்வரனின்  மாற்று இசை முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

அழகோடு ஆரோக்கியம் காக்கும் செம்பரத்தம் பூ!

Sea of Milk – Dushsagar Falls!

அக்னி நட்சத்திர காலத்தில் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?

முழங்கால் மூட்டு வலிக்கு காரணமும் உடனடி எளிய தீர்வும்!

ஆசியாவிலேயே உயரமான ஸ்தூபி, 130 அடி உயர புத்தரின் சிலை உள்ள மைண்ட்ரோலிங் மடாலயம்!

SCROLL FOR NEXT