Potato 
அழகு / ஃபேஷன்

முகத்தில் உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்துங்களேன்!

பாரதி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு என்றால், அனைத்து வேலைகளையும் தூக்கிப்போட்டு சரியான நேரத்திற்கு சாப்பிடுவார்கள் . ஆகையால், அனைவர் வீட்டிலும் கட்டாயம் உருளைக்கிழங்கு இருக்கும். இந்த உருளைக்கிழங்கு முகத்திற்கும் பல நன்மைகளை அள்ளித் தரும் என்பதுபற்றி உங்களுக்கு தெரியுமா?

காலை எழுந்ததும் கிளம்பி வேலைக்கு சென்று திரும்பினால் போதும், முழு நாளும் எப்படி போனது என்றே தெரியாது. இதற்கு நடுவில், நமது ஆரோக்கியத்தையும் அழகையும் கவனிக்க நேரமே இருக்காது. அந்த மாதிரியான சமயங்களில், ஏதாவது எளிதான டிப்ஸ் இருக்குமா என்றுதான் சிந்திக்க தோன்றும். அந்தவகையில், ஒரு எளிதான பியூட்டி டிப்ஸ் தான் உருளைக்கிழங்கு பயன்படுத்தி முகச் சருமத்தை ஆரோக்கியமாக்குவது.

அந்தவகையில் முகச்சருமத்தில் உருளைக்கிழங்கை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள்:

உருளைக்கிழங்கு விழுது 2 டீஸ்பூன் மற்றும் மஞ்சள் தூள் ½ டீஸ்பூன், இவ்விரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். பின் 15 முதல் 20 நிமிடங்கள் வரை முகத்தில் ஊறவைத்து, பின் கழுவ வேண்டும்.

மஞ்சள் முகப்பரு வீக்கத்தை குறைக்க உதவும், அதேபோல் உருளைக்கிழங்கு முகத்தைப் பிரகாசமளிக்கும். ஆகையால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, உருளைக்கிழங்கு முகச்சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

உருளைக்கிழங்கு மற்றும் தேன்:

2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தேன் 1 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் வரை முகத்தில் தடவி ஊறவைக்க வேண்டும். இரண்டு பொருட்களுமே முகத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும். ஆகையால் முகம் வறட்சியாகாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் முகச்சருமம் மென்மையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை:

உருளைக்கிழங்கு விழுது 2 டீஸ்பூனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.

இது கரும்புள்ளிகளை குறைத்து செத்த செல்களை வெளியேற்றும். அதேபோல், சருமம் பிரகாசமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரி:

அதேபோல், வெள்ளரிக்காய் விழுது 1 ஸ்பூன் மற்றும் உருளைக்கிழங்கு விழுது 1 ஸ்பூன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின் சுத்தமாக கழுவ வேண்டும்.

இந்த பேஸ் பேக் கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் சோர்வுற்ற கண்களை புத்துணர்வு பெற செய்யவும், கண்களைச் சுற்றியுள்ள சருமத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.


தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

SCROLL FOR NEXT