See the invisible black holes in the universe
See the invisible black holes in the universe https://m.facebook.com
பசுமை / சுற்றுச்சூழல்

அண்டத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கருந்துளைகளை பார்க்கலாம் வாங்க!

நான்சி மலர்

பிரபஞ்சத்தில் இருக்கும் எண்ணற்ற அற்புதங்கள் மற்றும் அதிசயங்களில் நாம் அறிந்தது வெறும் சில துளிகளேயாகும். பால்வெளி மண்டலம், சூப்பர் நோவா, கிரகங்கள், சூரியன், வார்ம் ஹோல் போன்றவற்றை தினம் தினம் புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றைப் போலவே அண்டத்தில் நாம் கண்டுபிடித்த கண்ணுக்குத் தெரியாத ஒரு அற்புதம்தான் கருந்துளையாகும்.

கருந்துளை என்பது அண்டவெளியில் காணப்படும் வெற்றிடமாகும். இதன் ஈர்ப்பு விசையின் அளவு எவ்வளவென்றால் ஒளியை கூட தன்னுள் உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையதாகும். இது உருவாவதற்கான காரணமாகச் சொல்லப்படுவது என்னவென்றால், பெரிய நட்சத்திரங்கள் அழியும்போது இதுபோன்ற கருந்துளைகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. கருந்துளைகள் கோள வடிவத்தை கொண்டதாகும். இதற்குள் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கண்டறிய முடியாது. அதனாலேயே இது இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

கருந்துளைகளை கண்களால் காண இயலாது. சில சமயங்களில் ஏதேனும் பொருள் கருந்துளைகளில் விழும்போது அது சூடாவது மட்டுமில்லாமல் ஒளியை உருவாக்குவதை வைத்தே கருந்துளை இருக்கும் இடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள். சில சமயங்களில் கருந்துளை இருக்கும் இடத்தை அதன் அருகிலிருக்கும் நட்சத்திரங்கள் சுற்றி வருவதை வைத்து அந்த கருந்துளையின் அளவை கணக்கிடுவார்கள்.

கருந்துளைகள் மோதிக்கொள்ளும் சமயங்களில் அண்டத்தில் ஏற்படும் அலைகளை வைத்து கருந்துளைகள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது, எவ்வளவு பெரிதாக உள்ளது, எவ்வளவு வேகம் கொண்டது போன்றவற்றை தெரிந்துக்கொள்ளலாம்.

விண்வெளியில் எண்ணற்ற கருந்துளைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் நம்மால் காண இயலாது. கருந்துளைகளுக்கு அருகில் செல்லும் அனைத்தையும் அது உறிஞ்சிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை 1500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

ஈவென்ட் ஹரிசான் தொலைநோக்கிதான் முதலில் 2019ல் M87 கருந்துளையின் புகைப்படத்தை எடுத்தது. இந்த கருந்துளையின் அளவு சூரியனை விட 6.5 மில்லியன் பெரியதாகும். இதுவே 21ம் நூற்றாண்டின் மிகபெரிய கண்டுப்பிடிப்பு மற்றும் சாதனையாகும்.

கருந்துளைகள் எந்த சத்தமும் எழுப்புவதில்லை. அது முழுக்க முழுக்க புவி ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. எனினும், அது ஒலி அலைகளை எழுப்பக்கூடியதாகும். பால்வெளி மண்டலத்தில் இருக்கும் மிகபெரிய கருந்துளையின் பெயர் சாகிடேரியஸ் ஏ என்பதாகும். கருந்துளைகளை பற்றி விரிவாக ஆல்பர்ட் ஐன்ஸ்டினின், ‘ஜெனரல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி’யில் கணிக்கப்பட்டிருக்கிறது. அவரே கருந்துளைகளை பற்றி முதலில் கண்டுபிடித்து சொன்னவராவார்.

1975ம் ஆண்டு ஸ்டெபன் ஹாக்கிங் என்னும் பிரபலமான விஞ்ஞானி கருந்துளைகள் வெறும் கருமை நிறம் கொண்டதில்லை, அது ஒளியை வெளிப்படுத்தக்கூடிய தன்மையை கொண்டவை என்று கூறியிருக்கிறார். இதனை ‘ஹாக்கிங் ரேடியேஷன் தியரி’ என்றும் குறிப்பிடுவார்கள். கருந்துளைகள் இறப்பதில்லை. எனினும் காலப்போக்கில் ஆவியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய கணித மேதையான ராமானுஜம் நேரடியாக கருந்துளைகளை பற்றி சொல்லவில்லையென்றாலும் அவர் கண்டுப்பிடித்த கணிதவியல், கருந்துளைகளை பற்றி படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் உதவுகிறது என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT