குடைமிளகாய் 
உணவு / சமையல்

குடைமிளகாய் இருந்தால் போதும்.. வேறு எதுவும் தேவையில்லை.. டேஸ்டியான பொறியல் செய்யலாம்.!

விஜி

குடைமிளகாய் என்றதும் நம் நினைவுக்கு வருவது சைனீஸ் வகை உணவுகள் தான். குறிப்பாக பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன், சில்லி பிரைடு உணவு வகைகளில் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் குடை மிளகாய், ஹோட்டல்களில் பல வகை உணவை அழகுபடுத்த பயன்படுகின்றன. குடைமிளகாயை எந்த உணவில் சேர்த்தாலும் அது ஒரு தனி சுவையையே கொடுக்கும்.

குறிப்பாக குடைமிளகாயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சிலவகை புற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. எடை குறைப்புக்கு குடைமிளகாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை எடுத்து கொள்ளலாம். குடை மிளகாய் சீக்கிரத்திலேயே வெந்துவிடுவதால் அது ஈஸியாகவே செய்யமுடியும். வெறும் 4 பொருட்களை வைத்து எப்படி ஈஸியாக குடைமிளகாய் பொறியல் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

குடை மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 4

பூண்டு - 5 பல்

வேர்க்கடலை - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி கொள்ளவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் குடை மிளகாயை போட்டு வதக்கவும். மூடி போட்டால் நன்கு வெந்துவிடும் என்பதால் திறந்த படியே சிம்மில் வைத்து வதக்கவும். இது ஒரு புறம் இருக்க காய்ந்த மிளகாய், பூண்டு, வேர்க்கடலையை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

பிறகு குடை மிளகாய் வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். தொடர்ந்து, அரைத்து வைத்த பொடியயும் சேர்த்து நன்றாக கிளறி ஒரு 2 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வளவு தான் கமகமக்கும் குடை மிளகாய் பொறியல் தயாராகிவிடும். இதனின் வாசம் அட்டகாசமாக இருக்கும் என்பதால் பலரும் இந்த பொறியலை விரும்பி சாப்பிடுவார்கள்.

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

கங்குவா - என்னத்த சொல்ல?

SCROLL FOR NEXT